பின் வாங்கிய சிவகார்த்திகேயன்.. தனுஷுடன் மோத தயாரான பிக் பாஸ் பிரபலம்.. எல்லாம் பக்கா பிளானா?

சென்னை: பிக் பாஸ் பிரபலமான ரியோ ராஜின் புதிய படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சன் மியூசிக் விஜே, விஜய் டிவியின் செல்லப் பிள்ளை, பிக் பாஸ் பிரபலம், ஹீரோ என பன்முகம் கொண்டவர் ரியோ ராஜ்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

பின் வாங்கிய சிவகார்த்திகேயன்

பின் வாங்கிய சிவகார்த்திகேயன்

மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக அதிரடியாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் மே 13ம் தேதி இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வெளியாகிறது.

சிவகார்த்திகேயனுடன் போட்டி இல்லை

சிவகார்த்திகேயனுடன் போட்டி இல்லை

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ ராஜ். பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ப்ரமோஷனை ஆரம்பித்த அவர், டாக்டர் படத்துடன் போட்டியாக தனது படம் வெளியாகாது என அறிவித்திருந்தார்.

ஏப்ரல் ரிலீஸ்

ஏப்ரல் ரிலீஸ்

டாக்டர் திரைப்படம் மே மாதத்துக்கு தள்ளிப் போன நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் பிளான் பண்ணி பண்ணனும் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை நடிகர் ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், ரிலீஸ் தேதி எப்போ என்று இன்னமும் அறிவிக்கவில்லை.

தனுஷுடன் போட்டியா

தனுஷுடன் போட்டியா

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ரஜிஷா விஜயன், லால் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் ரிலீஸ் என ரியோ ராஜ் அறிவித்துள்ளதால், கர்ணன் திரைப்படத்துக்கு போட்டியாக வெளியாகுமா? அல்லது ஏப்ரல் இறுதியில் வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

இந்த படத்துல ROMANCE கிடையாது | CLOSE CALL WITH RIO RAJ, REMYA CHAT PART - 02| FILMIBEAT TAMIL
மீண்டும் லாக்டவுன்

மீண்டும் லாக்டவுன்

கொரோனா 2வது அலை போல நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஒரு லாக்டவுனை அரசு அறிவிக்குமா? என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்தது. கடந்த ஆண்டு செய்ததை போல தியேட்டர்களுக்கு பூட்டுப் போட சொன்னால், 50 சதவீதமாக இருக்கைகளை குறைக்க சொன்னால் மீண்டும் சினிமா துறை பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்படும் அபாயமும் உள்ளதாக பல தியேட்டர் அதிபர்கள் புலம்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X