என்னம்மா ஆடுறாரு.. பிக் பாஸ் வீட்டில் வெளியான ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் வீடியோ பாடல்!

சென்னை: நடிகர் ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வீடியோ பாடல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், ரேகா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரியோவின் நடனத்தை பார்த்து ஆச்சர்யப்பட்ட ஹவுஸ்மேட்கள் அவர்களும் அந்த பாட்டுக்கு நடனமாடியது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

ஹீரோ ரியோ

ஹீரோ ரியோ

சன் மியூசிக் விஜேவாக இருந்த ரியோ ராஜ், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமாகி பிரபலமானார். பிளாக் ஷிப் டீம் இயக்கத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் நாயகனாக அறிமுகமானார் ரியோ. அந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரியோவின் இரண்டாவது படமாக பிளான் பண்ணி பண்ணனும் உருவாகி உள்ளது.

யுவன் இசையில்

பானா காத்தாடி படத்தை இயக்கிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது பிரேம்ஜி அமரன் குரலில் வெளியான அந்த வீடியோ பாடல் வைரலாகி வருகிறது.

என்னம்மா ஆடுறாரு ரியோ

என்னம்மா ஆடுறாரு ரியோ

முதல் படத்தில் இருந்து இரண்டாவது படத்துக்கு ரொம்பவே ட்யூன் ஆகி உள்ளார் ரியோ என்பது இந்த வீடியோ பாடலை பார்த்தாலே தெரிகிறது. ஹீரோவான நிலையில், நல்லா டான்ஸ் ஆடணும் என ரொம்பவே கடுமையாக நடன பயிற்சி மேற்கொண்டு ஆடியுள்ளார். அனிகா சோட்டியுடன் கவர்ச்சியாக ஆடியதை பார்த்த ஹவுஸ்மேட்கள் வாய் பிளக்க ஆரம்பித்து விட்டனர்.

ஒரே கொண்டாட்டம்தான்

ஒரே கொண்டாட்டம்தான்

ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வீடியோ பாடலை பிக் பாஸ் வீட்டில் வெளியிட்ட நிலையில், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும், எந்தவொரு ஈகோவும் இல்லாமல், ரியோவை கொண்டாட ஆரம்பித்தனர். சக கலைஞனின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி கொள்வதை விட ஆனந்தம் வேறொன்றும் இல்லை என்பது போல, அனைவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி அந்த தருணத்தை கொண்டாடியது ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X