சிரி ரியோ.. எல்லோரையும் ஹேப்பி பண்ணிட்டு வரணும்.. ஆர்டர் போட்ட ஸ்ருதி.. கமலுடன் உரையாடிய ரியா!

சென்னை: என்னப்பா ரியோ அதான் கிராண்ட் ஃபினாலேவே வந்துடுச்சே.. இன்னும் ஏன் உம்முன்னு இருக்க என எல்லோரையும் கேட்க வைத்து விட்டார் ரியோ.

போதாகுறைக்கு கிராண்ட் ஃபினாலேவில் ரியோவின் மனைவி ஸ்ருதியும் சிரி ரியோ உன்னை இப்படி பார்க்க பிடிக்கவே இல்லை.. வரும் போது எல்லாரையும் சிரிக்க வைத்து என்டர்டெயின் பண்ணிட்டுத் தான் வரணும் எனவும் ஆர்டர் போட்டார்.

சனிக்கிழமை கமல் சாரும் ரியோவை சிரிக்க வைக்க அந்த பாடு பட்டது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷத்தில் கமல்

சந்தோஷத்தில் கமல்

இறுதிப்போட்டியாளர்களாக தேர்வான ஆரி, பாலாஜி, ரம்யா, சோம் மற்றும் ரியோவின் குடும்பத்தினர் லைவ் ஆடியன்ஸாக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் பங்கேற்றனர். இத்தனை நாள் தனியா பேசி தவித்துக் கொண்டிருந்தேன். இன்னைக்கு இத்தனை பேர் இருப்பது எனக்கு சந்தோஷம் என்றார் கமல்.

கவலையில் ரியோ

கவலையில் ரியோ

கடந்த சில வாரங்களாகவே ரியோ ராஜ் ரொம்பவே கவலையில் இருந்து வருகிறார். கமல் சனிக்கிழமை எபிசோடே ரியோவை தேற்றுவதற்காகவே ஷோ நடத்தியது போல இருந்தது. கிராண்ட் ஃபினாலேவில் கூட ரியோ ராஜ் இன்னமும் சோகத்துடனும் கவலையிலும் இருந்தார். அவர் மனதில் என்னதான் நினைக்கிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை.

சிரிடா ரியோ

சிரிடா ரியோ

ரியோவுக்கு கமல் டென்ட் பரிசு கொடுத்து காட்டுக்குப்போய் என்ஜாய் பண்ணுங்க என கலாய்த்தார், அதன் பின்னர் பேசிய ரியோவின் மனைவி ஸ்ருதி, சிரிடா ரியோ.. உன்னை இப்படி பார்க்க புடிக்கல.. நீ ஒரு என்டர்டெயினர்.. எப்பவுமே என்டர்டெயினராகவே இரு, வரும் போது வீட்டில் உள்ள அனைவரையும் ஹேப்பி ஆக்கிட்டு வா என்றார்.

பாலா புரோ

பாலா புரோ

அடுத்ததாக பாலாவுக்கு கமல் டம்பல்ஸை பரிசாக அளித்தார். அதன் பின்னர் பேசிய பாலாவின் அண்ணன் ஏன் ஒரு வாரமா சோகமா இருக்க.. உன் கிட்ட நான் என்ன சொல்லிட்டு வந்தேன்.. உன் கேம் நல்லா இருக்கு.. அதையே தொடர்ந்து விளையாடுன்னு தானே சொன்ன.. என பேசினார். நீ இந்த இடத்துக்கு வர நீ தான் காரணம் நல்லா விளையாடியிருக்க சூப்பர் என்று பாராட்டினார்.

பாப்புலரான பரசு

பாப்புலரான பரசு

ரம்யாவுக்கு கமல் ஆர்கானிக் விதைகளையும் ஒரு செடியையும் பரிசாக அளித்தார். குடும்பத்தை பார்த்து சந்தோஷப்பட்ட ரம்யாவிடம் ரம்யாவின் தம்பி பரசு பேசினார். கமல் நீங்களும் இப்போ பாப்புலர் ஆகிட்டீங்களே பரசு என்று பாராட்டியதும் பூரித்துப் போனார். பரசு, ரம்யா அம்மா மற்றும் அக்கா ஆகியோரும் ரம்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரியா குட்டி

ரியா குட்டி

ஆரியின் மனைவி மற்றும் ரியா குட்டி ஆரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். கமல் மாமாவுக்கு ஹாய் சொல்லு என ஆரி சொன்னதும், செம க்யூட்டாக ரியா பேசினார். அப்போதும், கமல் உங்களை தூக்கி வைத்து விளையாடிய ரியோவிடம் பேசுங்க, என ரியோவின் மனதை ஹேப்பி மோடுக்கு கொண்டு வர கமல் மீண்டும் மெனக்கெட்டார்.

சோம் அம்மா

சோம் அம்மா

சோமசேகரின் அம்மா, அண்ணன் மற்றும் அண்ணி பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு வந்திருந்தனர். சோமசேகருக்கு கமல் சார் இசைக்கருவி ஒன்றை பரிசாக அளித்தார். அதனை வாசித்து விட்டு அம்மா மற்றும் குடும்பத்தினரின் ஆசிகளை சோம் சந்தோஷமாக பெற்றுக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X