அவசரப்பட்ட ஆரி.. ஆதங்கப்பட்ட அனிதா.. விட்டுக் கொடுக்காத ரியோ.. இறுதியில் ஜெயித்தது யார் தெரியுமா?
சென்னை: தங்க முட்டை டாஸ்க்கை ஹவுஸ்மேட்கள் சரியாக புரிந்து கொண்டார்களா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ரியோ மட்டும் அதை சரியாக புரிந்து கொண்டு விளையாடி வருகிறார்.
ஒரே நேரத்தில் இருவர் அட்டாக் பண்ணக் கூடாது என்கிற விதியை வைத்துக் கொண்டு தனது தங்க முட்டையை காப்பாற்றினார் ரியோ.
அனிதா போக வேண்டும் என நரிக்கூட்டம் முடிவு செய்த நிலையில், ஆரி உள்ளே புகுந்து ஆடியதும் தலைவி அர்ச்சனா பஞ்சாயத்துக்கே வந்துவிட்டார்.

ஆரிக்கு புடிக்கல
நரிக்கூட்டம் என்கிற பெயரில் அர்ச்சனா, ரம்யா பாண்டியன் மற்றும் அனிதா டீமாக சேர்ந்து கொண்டு விளையாடுவது ஆரிக்கு பிடிக்கவில்லை. மேலும், ஆரிக்கு வாய்ப்பு கொடுக்காமல், அனிதாவுக்கு வாய்ப்பு கொடுத்ததால், செம கடுப்பாகி விட்டார். எப்பவுமே கடைசியா போனா எனக்கு எப்படி காசு கிடைக்கும் என்கிற அவரது கேள்விக்கு அர்ச்சனா மற்றும் ரம்யாவிடம் நேரடி பதில் இல்லை.

சண்டை தான் நடக்குது
எல்லோருக்கும் சமமான சான்ஸ் கொடுக்காமல் விளையாடுவது என்ன கேம் எனக் கேட்கும் ஆரியை எதிர்த்து ரம்யா பாண்டியன் கத்தத் தொடங்கியதும், அர்ச்சனா மற்றும் அனிதா ஓவர் ரியாக்ஷன் கொடுத்ததும், ஆரி சூடாக ஆரம்பித்து விட்டார். உங்க இஷ்டத்துக்கு என்னால கேம் ஆட முடியாது. நான் ஏன் இஷ்டத்துக்கு ஆடுறேன் என முடிவு செய்ததால் அப்படியொரு சம்பவம் நடந்தது.

புரிந்துகொண்ட ரியோ
பிக் பாஸ் டீம் கொடுத்த இந்த இடியாப்ப சிக்கல் கேமை தெளிவாக புரிந்து கொண்டு விளையாடி வருகிறார் ரியோ. அர்ச்சனா மற்றும் ஹவுஸ்மேட்களுக்கு அதை ஆரம்பத்தில் இருந்தே புரிய வைக்க முயற்சி செய்து வந்தாலும், யாரும் ரியோவின் பேச்சைக் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அனிதா, ரியோவின் இமேஜை பிக் பாஸ் வீட்டில் கெடுத்து வைத்துள்ளார்.

அனிதாவும் ஆரியும்
பஸர் அடித்ததும் ரியோவின் தங்க முட்டையை ஆரி தொட, அதன் பிறகு அனிதாவும் அதை தொட்டுவிட்டார். இருவரும் ஒரே நேரத்தில் முயற்சி செய்யக் கூடாது என்பதை தெளிவாக ரியோ எடுத்து சொல்ல, ஆரிக்கும் ரியோவுக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் எழுந்தது. அர்ச்சனாவின் நரிக்கூட்டம் அனிதாவுக்கே சப்போர்ட் செய்தது.

ரியோ உறுதி
ஆரி தான் ஜெயித்ததாக நினைத்துக் கொண்டு தங்க முட்டையை எடுத்துப் போய் மற்ற முட்டைகள் இருக்கும் இடத்தில் வைத்தார். ஆனால், ரியோ அங்கிருந்து எடுத்து வந்து, இது தவறான ஆட்டம், பிக் பாஸ் சொல்லட்டும் நான் என் முட்டையை கொடுக்கிறேன் என ரியோ இறுதி வரை உறுதியாக இருந்தார்.
Recommended Video

ரியோவுக்கே வெற்றி
அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நரிக்கூட்டத்தினர் அனிதாவுக்கு சப்போர்ட் செய்தனர். ஆரி சோலோவாக தான் ஆடிய கேம் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். அதே போல, ரியோவும் இது தவறான ஆட்டம், நாம நம்ம முட்டையை இழக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்த நிலையில், பிக் பாஸ் அடுத்ததாக ஒரே ஒரு முட்டையை மட்டுமே அனுப்பி, ரியோவை அந்த சுற்றில் வெற்றியாளராக அறிவித்து விட்டார்.


Click it and Unblock the Notifications











