கமலுக்கு முன்னாடியே சக்திமான் மாதிரி சுத்திய ரியோ.. ஷிவானிக்கு மறுபடியும் புரோக்கன் ஹார்ட்டா?
சென்னை: இன்றைய எபிசோடின் முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுவரை அப்பப்போ பெர்ஃபார்ம் பண்ணி வரும் ரியோ ராஜ், கமல் சார் முன்னாடியே பெர்ஃபார்ம் பண்ண அதிரடியான புரமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆனால், ஷிவானிக்கு ஏன் ரியோ புரோக்கன் ஹார்ட் கொடுத்தார் என ஷிவானி ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகவே உள்ளனர்.

நம்பியார் பிக்பாஸ்
பிக் பாஸ் வீட்டில், பெண் போட்டியாளர்களுக்கு படுக்கை அறை கிடைத்துள்ள நிலையில், ஆண்கள் அணிக்கும் இன்னும் அந்த ரூம் திறக்கவே இல்லை. இதனால், நிச்சயம் போட்டியாளர்கள் நடுவே பிரச்சனைகள் கிளம்பும் என்பதற்காகவே நம்பியார் பிக் பாஸ் இப்படி ஒரு வில்லத் தனத்தை செய்துள்ளார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

வயசானவர்
பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தியை மாமனாரே என நிஷா அழைத்து வரும் நிலையில், இந்த வீட்டில் நான் தான் தாத்தா என அவரே நேற்றைய எபிசோடில் கமல் முன்னாடி சொன்னது ரசிகர்களை ரசிக்க வைத்தது. வயசானவரான சுரேஷ் சக்கரவர்த்தி படுக்கை இல்லாமல் ரொம்பவே சிரமப்பட்டு வந்தார்.

பெண்கள் பெட்ரூமில்
மருத்துவர்கள் ஆலோசனைப்படி ரியோ ராஜ் காட்டிய அக்கறையின் பேரில், பிக் பாஸ் ரியோவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பெண்கள் பெட்ரூமில் ஒரு படுக்கையை சுரேஷுக்கு ஒதுக்கிக் கொடுக்க சொல்ல, ரியோவும் அந்த வேலையை செவ்வனே செய்தார். நிஷா மற்றும் சனம் ஷெட்டி, படுக்கையை ஷேர் செய்து கொண்டு சுரேஷுக்கு இடம் கொடுத்தனர்.

கமலிடம் பெட்ரூம் கேட்ட ரியோ
இப்போ வெளியாகி உள்ள முதல் புரமோவில் What is the procedure to change the room சார் என கமலிடம் நடிகர் ரியோ ராஜ் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வரும் வசனத்தை வைத்து கேள்வி எழுப்பி செமயா பெர்ஃபார்ம் பண்ணினார். பின்னர், கமல், நானும் அதையேத்தான் பிக் பாஸ் கிட்ட வந்ததுல இருந்து கேக்குறேன் என கமல் பதிலளித்தார்.

செம காண்டு
ஆஜீத் மற்றும் ஷிவானிக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்த ரியோ ராஜ், ஷிவானியிடம் உங்க மேல பெரிய கோவம்லாம் இல்லை, சும்மா வேற வழியில்லாம கொடுக்கிறேன் என பம்மினார். ரேகா மற்றும் பாலாஜி முருகதாஸுக்கு ஹார்ட் கொடுத்தார். இதனால், ரியோ மீது ஷிவானி ஆர்மியினர் செம காண்டில் உள்ளனர்.

சக்திமான் மாதிரி
நடிகை ரேகாவுக்கு ரியோ ராஜ் ஹார்ட் கொடுக்கும் போது ரேகா ஒரு சூப்பரான ரியாக்ஷன் கொடுத்தாங்க, அதை பார்த்த கமல், இது உங்களுக்கு சந்தோஷமா? இல்லை வருத்தமா? என்கிற ரேஞ்சுக்கு கேட்டு செம கலாய் கலாய்த்தார். நடிகர் ரியோ திடீரென சக்திமான் மாதிரி சுத்த ஆரம்பிச்சுட்டாரு, என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க இன்றைய எபிசோடை பார்த்தா தான் புரியும் அந்த அளவுக்கு எடிட்டர் இடையே புகுந்து விளையாடிட்டார்.


Click it and Unblock the Notifications











