உன்னை குழந்தைன்னு சொன்னா உனக்கு வலிக்கும்.. சோமை ’பப்பட்’னு சொன்னா இனிக்குமா? கலக்கிய ரியோ!

சென்னை: நீதிமன்றம் டாஸ்க்கில் கடைசியாக பாலாவை வச்சு செய்து விட்டார் நடிகர் ரியோ ராஜ்.

தொடர்ந்து நீதிமன்ற டாஸ்க்கில் நம்ம ஜித்தன் ரமேஷ் மாதிரி ஆடியன்ஸாக உட்காராமல் வழக்கறிஞராக களமிறங்கி வாதாடி தனது கேமை நல்லாவே ஆடினார் ரியோ.

சோமசேகரை (பப்பட்) கைப்பாவை என பாலா சொன்னதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சோம் வெற்றிப்பெற்றார்.

’பப்பட்’ பிரச்சனை

’பப்பட்’ பிரச்சனை

'பப்பட்' என்றதும் ஏதோ பப்படத்துக்கு அடித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம். பாலாஜி முருகதாஸ், சோமசேகரை பார்த்து அவர் ஒரு கைப்பாவை, கீ கொடுத்தா ஓடுற பொம்மை எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவர் தலைவருக்கு தேர்வாக தகுதியில்லை எனக் கூறியதை எதிர்த்து சோம் பிக் பாஸ் வீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நான் அதை மீன் பண்ணல

நான் அதை மீன் பண்ணல

பாலாஜி முருகதாஸ், நான் சும்மா வழக்கம் போல, எல்லாரையும் அசிங்கமா திட்டுறது போலத்தான் அவரையும் திட்டுனேன் என கேஷுவலாக சொல்ல, பாலாஜியை பார்த்து ஏற்கனவே அசடு வழியும் நீதிபதி சுசித்ரா, பாலாவுக்கு ஆதரவாகவே இந்த தீர்ப்பையும் கொடுத்து விடலாம் என ‘உம்' கொட்டி பாலாவை நல்லா பேச விட்டு கேட்டுக் கொண்டு இருந்தார்.

பொம்மலாட்ட பொம்மை

பொம்மலாட்ட பொம்மை

பாலாஜி மேல இருக்கிற மொத்த கடுப்பையும் சுரேஷ் தாத்தா செமயா கொட்டித் தீர்த்தார். இந்த இடத்தில அவர் பயன்படுத்திய பொம்மலாட்ட பொம்மைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? முதுகெலும்பு இல்லாத, சுய புத்தி இல்லாத, சொல் பேச்சைக் கேட்டு ஆடும் பொம்மை என்றே அவர் குற்றம் சாட்டினார் என்றார். உடனே பாலா, இப்படி அவரை அவங்க தான் சொன்னாங்க, என சேம் சைடு கோல் அடிக்க ஆரம்பித்தார்.

எடுத்துக் கொடுத்த ரம்யா

எடுத்துக் கொடுத்த ரம்யா

பப்பட், பப்பட் என இப்போ இவங்க 1000 தடவை சொல்றாங்களே என பாலா எகிறும் போது, ரம்யா பாண்டியன் சூப்பரா ஒரு பாயின்ட்டை எடுத்துக் கொடுத்தாங்க, உங்களை குழந்தைன்னு சொல்லும் போது உங்களுக்கு கோபம் வரவில்லையா எனக் கேட்டார். அதை கப்புன்னு புடிச்சிக்கிட்ட ரியோ பாலாஜியை வெளுத்து விட்டார்.

ரியோ ராஜ்

ரியோ ராஜ்

ஒவ்வொரு வழக்கிலும் நீதிபதி சுசித்ரா ஒரு செட் பிராப்பர்ட்டியை போல மட்டுமே இருந்தார். ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜ் ஆகிய இருவரும் தான் சிறப்பாக யாரையும் ஹர்ட் பண்ணாமல் வாதாடினார்கள். ரம்யா கொடுத்த பாயின்ட்டை வைத்துக் கொண்டு, பட்டிமன்றத்தின் போது அர்ச்சனா அக்கா குழந்தைன்னு சொன்னது உனக்கு எப்படி கஷ்டமாச்சோ அதே மாதிரி தான பப்பட் என்கிற வார்த்தை அவருக்கு கஷ்டமாக இருக்கும் என பேசி கோல் அடித்து சோமசேகருக்கு வெற்றிப் பெற்றுத் தந்தார்.

குலுக்கல் லாட்டரி சீட்

குலுக்கல் லாட்டரி சீட்

வாதத்தின் அடிப்படையில் நீதி கொடுக்க சுசித்ராவை நீதிபதியாக உட்கார வைத்தால், அதை விட்டு விட்டு பிக் பாஸ் வீட்டில் தலைவரை தேர்வு செய்வது போலவும் குலுக்கல் லாட்டரியை போலவும், யாரெல்லாம் அதிக ஓட்டு போடுறீங்க, அவங்க ஜெயிச்சாங்க என சொல்வது என்ன ஒரு தீர்ப்பு என்றே தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X