மகள் ரிதி-யின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்தார்.. ரியோ ராஜ் !
சென்னை : நடிகர் மற்றும் விஜே என தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகர் ரியோ ராஜ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை மற்றும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது வெற்றிப் பயணத்தை தொடங்கிய ரியோ ராஜ் இப்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரியோ ராஜ்க்கு ஆறு மாதத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை முகத்தை இன்று வரை வெளியில் காட்டாத ரியோ ராஜ் இப்போது முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எதார்த்தமான பேச்சு
எதார்த்தமான பேச்சு, இயல்பான அணுகுமுறை என தனக்கே உரித்தான பாணியில் கேஷுவலாக லைவ் ஷோவில் கலக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் ரியோ ராஜ்.

சரவணன் மீனாட்சி
இவ்வாறு சன் மியூசிக்கில் விஜேவாக பிரபலமான ரியோ அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அறிமுகமானார்.

ஹீரோவாக அறிமுகமானார்
இவ்வாறு தனது துடிப்பான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்த ரியோ சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

அடையாளத்தை
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" திரைப்படத்திற்கும் முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரியோவுக்கு "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" ஒரு முழு ஹீரோவுக்கான அடையாளத்தை பெற்று தந்தது.

காதலித்து திருமணம்
இவ்வாறு படிப்படியாக தொலைக்காட்சியிலிருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ரியோ 2017 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆறு மாதத்திற்கு பிறகு
இந்நிலையில் இந்த அழகான தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தைப் பிறந்த நிலையில், குழந்தையின் முகத்தை இதுவரை வெளியில் காட்டாத ரியோ இப்பொழுது முதன் முறையாக ஆறு மாதத்திற்கு பிறகு வெளியிட்டுள்ளார்.

குடும்பப் புகைப்படம்
ரியோ மற்றும் ஸ்ருதி இருவரும் கடற்கரையில் உட்கார்ந்தவாறு குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு, ரியோ வெளியிட்டுள்ள இந்த அழகான குடும்பப் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வரும் நிலையில் இப்பொழுது வைரலாகி வருகிறது.

வயது ஆறு மாதம்
மேலும் அதில் ரியோ கூறியிருப்பதாவது தனது மகள் ரிதி-யின் அரையாண்டு முடிந்துவிட்டது, ஆம் இப்பொழுது ரிதிக்கு வயது ஆறு மாதம் என மகிழ்ச்சியுடன் தனது செல்ல மகளுடன் இருக்கும் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











