குடும்பத்துடன் காட்டுக்கு சென்ற ரியோ ராஜ்.. குழந்தையோட எடுத்த க்யூட் பிக்ஸ் செம வைரல்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் சொன்னது போலவே காட்டுக்கு சென்றுள்ள ரியோ ராஜ், அங்கே குழந்தையுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான ரியோ ராஜ் ரன்னர் அப்பாவது வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த நிகழ்ச்சியின் முடிவுகள் சற்று ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும்.

காடுகளுக்கு ட்ரிப் போவதை என்ஜாய் பண்ணும் ரியோ தற்போது குடும்பத்துடன் காட்டுக்கு சென்று எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

காட்டுக்கு போறோம்

காட்டுக்கு போறோம்

"காட்டுக்குப் போறோம்.. காட்டுக்குப் போறோம்.. சுத்தி பார்க்க போறோம்.. வண்டியை நிறுத்துங்க.. தேடி பார்ப்போம் அங்க" என சூச்சு சூச்சு டிவி எனும் குழந்தைகளுக்கான யூடியூப் சேனலில் வரும் தமிழ் ரைம்ஸ் பாடலை கேப்ஷனாக போட்டு, ரியோ ராஜ் தற்போது தனது மகள் ரிதியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தார் ஜீப் மேல்

தார் ஜீப் மேல்

முன்னதாக ஜீப்பில் காட்டுக்கு செல்லும் வீடியோ ஒன்றை மட்டும் வெளியிட்டு இன்னொரு உலகத்திற்கு செல்கிறேன் என பதிவிட்டு இருந்த ரியோ ராஜ், தற்போது தனது தார் ஜீப் மேல் அமர்ந்து கொண்டு செம மாஸாக உட்கார்ந்து கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

தூரத்தில் யானை

தூரத்தில் யானை

காட்டு வழியாக ட்ரிப் செய்து கொண்டிருக்கும் ரியோவின் பாதைக்கு சற்று தூரத்திலேயே யானை ஒன்று கடந்து செல்வதை சேர்த்து எடுத்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகர் ரியோ ராஜ். காட்டுக்கு ட்ரிப் சென்றுள்ள ரியோ ராஜை, பத்திரமாக சென்று வாருங்கள் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

ஸ்ருதி எங்கே

ஸ்ருதி எங்கே

எந்த ஒரு போட்டோவிலும் ரியோ ராஜின் மனைவி ஸ்ருதியை காணவில்லையே அவர்களும் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுங்க என ரியோவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரியோவும் ரிதியும் இருக்கும் புகைப்படங்களை ஸ்ருதி தான் எடுத்திருப்பார் என்றும் கூறி வருகின்றனர்.

அர்ச்சனா கமெண்ட்

அர்ச்சனா கமெண்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களும் அன்பு கேங் நண்பர்களுமான கேபிரியல்லா மகளுடன் ரியோ இருக்கும் புகைப்படத்தை பார்த்து க்யூட்டு என கமெண்ட் செய்ய, அழகி குமாரு என அர்ச்சனா க்யூட்டாக கமெண்ட் போட்டுள்ளார். சன் மியூசிக் விஜே அஞ்சனாவும் ரியோவை வாழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X