ஸ்வீட் ஹார்ட் படத்தில் அந்த மாதிரி காட்சி.. என்னப்பா நடக்குது இங்க.. கலங்கிய ரியோ மனைவி!

சென்னை: ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் நல்ல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து பலரும் கலவையான விமர்சனங்களை தந்தாலும் இளைஞர்களுக்கு பிடித்த படமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இருக்கும் படுக்கை அறை காட்சிகளை பார்த்து ரியோவின் மனைவியே அப்செட் ஆகிவிட்டாராம். நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் ரியோ நடிப்பாரா அல்லத வேறு ஏதேனும் பிரச்னை வந்துவிட்டதா என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுக்க தொடங்கிவிட்டன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் ரியோ ராஜ். பின்பு சன் மீயூசிக்கில் விஜேவாக பணியை தொடங்கினார். விஜேவாக இருந்த போது அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம் இருந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் விஜய் டி.வி.யில் வெற்றிநடை போட்ட சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க தொடங்கினார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அப்படம் சுமாரான வெற்றியை தந்தது.

பிக்பாஸ்: சினிமாவில் சாதிக்க நினைத்த பலருக்கும் பிக்பாஸ் ஒரு கனவு மேடையை அமைத்து கொடுத்திருக்கிறது என்றே கூறலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பலரும் பிரபலம் அடைந்துள்ளனர். இதில் சிலரும் சினிமாவில் ஜொலிக்க தொடங்கியுள்ளனர். அதேபோன்று ரியோவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. பின்னர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவான ஜோ படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிவகார்த்திகேயன் போன்று சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் ஜெயிக்க பல முயற்சிகளை எடுக்கும் ரியோவிற்கு ஜோ படம் நல்ல பிரேக் கொடுத்தது.

rio-raj-talk-about-his-sweet-heart-kissing-scenes

தாடி வளர்த்த ரியோ: ஜோ படத்திற்காக ரியோ ஒரு வருடமாக தாடி வளர்த்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. படத்திற்கான நீளமான முடி போன்று வளர்ப்பவர்களை காமெடியனாக சித்தரிக்கும் காட்சிகள் அதிகம் வந்துள்ளன.ஆனால், 17 வயது முதல் 27 வயது வரையிலான இளைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் ஜோ. இதில் 2 விதமான காதல் கதைகள் இடம்பிடித்தன. காதலினால் வரும் தற்கொலை எந்த அளவிற்கு ஒருவரை பாதிக்க வைக்கிறது என்பதையும் ஆழமாக பதிவு செய்த படம் ஜோ. இப்படத்திற்காக ரியோ ஒரு வருடமாக தாடியோடு சுற்றி திரிந்தாராம்.

படுக்கை அறை காட்சி: தற்போது ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் தயாரித்துள்ளார். லவ் ஸ்டோரி நிறைந்த இப்படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை ப்ளசட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருந்தார். இருப்பினும் இளைஞர்களை கவர்ந்த படமாக உள்ளது.

சமீபத்தில் ரியோ அளித்த பேட்டியில், "இப்படத்தின் புரமோசனுக்காக மொட்ட மாடி பார்ட்டியில் நானும் சித்துவும் பிளான் பண்ணி யுவன் சங்கர் ராஜாவை அழைத்து வந்து செம்ம ஃபன் பண்ணோம். ஸ்வீட் ஹார்ட் படத்தில் ஹீரோயின் கோபிகா ரமேஷ் உடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததை பார்த்த என் மனைவி பொசசீவ் ஆகிட்டாங்க. இது படத்திற்காகத்தான் என்பதை தெரிந்த பின்பு கூல் ஆகிட்டாங்க. இந்த படத்தில் இடம்பிடித்த ஆசிரம காட்சிகள் நியாயமானதாக இருந்ததை என் மனைவி பாராட்டினார்" என ரியோ கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X