பிக் பாஸ் இப்படி அசிங்கமா பண்ணாதீங்க.. ரியோ பர்ஃபார்மன்ஸ் எல்லாம் அன்சீன்லயே போடுறீங்களே நியாயமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிக் பாஸ் அன்சீன் விஜய் மியூசிக்கில் தினமும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகளுடன் மொத்த எபிசோடும் காட்டப்படும்.
அதற்கான அன்சீன் புரமோ விஜய் மியூசிக் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இன்றைய புரமோ
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ரியோ ராஜ், சோமசேகர், கேபி, ஆஜீத், ஜித்தன் ரமேஷ் எல்லாம் அமர்ந்து கொண்டு பிக் பாஸையே கலாய்த்து பேசுகின்றனர். சுரேஷ் தாத்தா ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுத்து நடந்து போக அதை பார்த்து கேபியும், ஆஜீத்தும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

டைனோசர் போல
"ஏம்பாட்டு ஏம்பாட்டு" என்ற பாடலை ரியோ ராஜ் கிண்டலாக பாட சுரேஷ் சக்கரவர்த்தி அந்த பாட்டுக்கு ரியாக்ஷன் கொடுக்கிறாரா? இல்லை என்ன பண்ணுகிறார் என்றே தெரியவில்லை. ஏதோ ஒரு டைனோசர் நடந்து போவது போல அந்த இடத்தை கிராஸ் பண்ணி போவதை புரமோவில் காட்டி உள்ளனர்.

பிக் பாஸ் இப்படி அசிங்கமா பண்ணாதீங்க
நடிகர் ரியோ ராஜ், பாட்டுப் பாடும் போது, பிக் பாஸ் வீட்டின் கேமரா அப்படியே வேறு பக்கம் திரும்பி சென்று விட்டதை பார்த்த ரியோ ராஜ், மரண மொக்கையாக ஒரு கமெண்ட் அடித்ததை இந்த புரமோவில் போட்டுள்ளனர். பிக் பாஸ் இப்படி அசிங்கமா பண்ணாதீங்க, பாட்டுப் பாடும் போது திரும்பி போனீங்கனா ஒரு மாதிரி அவமானமா இருக்கு என கேமராவை பார்த்துக் கொண்டே சொல்கிறார்.

அன்சீனோட இருக்கட்டும்
இப்படி ரியோ ராஜ் பண்ற மொக்கை பர்ஃபார்மன்ஸ் எல்லாத்தையும் நல்ல வேளையாக அன்சீன்லயே போட்டு விட்டுடுங்க எடிட்டர். இதையெல்லாம் தயவு செய்து கூட மெயின் நிகழ்ச்சியில் போட்டுடாதீங்க என ரசிகர்கள் ரொம்பவே நொந்து போய் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











