ஜெயிக்கலன்னாலும் பரவாயில்லை.. ஹேப்பியா இரு.. ரியோவுக்கு முத்தமிட்டு அட்வைஸ் பண்ண ஸ்ருதி!

சென்னை: ரம்யாவின் குடும்பத்தினர் வந்து சென்ற பிறகு ரியோவுக்கான ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

96 பட பாடல் ஒலிக்க, நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான ரியோ ராஜின் மனைவி ஸ்ருதி வீட்டிற்குள் அழகாக நுழைந்தார்.

ஸ்ருதியை பார்த்ததுமே அன்ஃப்ரீஸ் ஆன ரியோ அவரைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.

சட்டென அழுதுடுவார்

சட்டென அழுதுடுவார்

அர்ச்சனாவின் அன்பு கேங்கில் இருந்த அனைவருக்கும் இதே பிரச்சனை இருக்கிறது. அதிலும் ரியோ தனது குடும்பத்தையும் பிறந்த குழந்தையையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விட்டு வந்ததில் இருந்து ரொம்பவே அப்செட்டாகத் தான் உள்ளே விளையாடி வருகிறார். மனைவியை பார்த்த மறுகணமே அதனால் தான் அழுது விட்டார்.

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம்

கிட்டத்தட்ட குவாரண்டைனையும் சேர்த்து 100 நாட்களுக்கு மேல் தனது கணவரை பிரிந்து இருந்த நிலையில், பார்த்ததும் அவரது நெற்றியில் முத்தமிட்டு தனது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ரொம்பவே க்யூட்டாக ஸ்ருதி வெளிப்படுத்தினார். நிச்சயம் ஸ்ருதிக்கும் இதற்கு மேல் ரசிகர்கள் உருவாகி விடுவார்கள்.

ரம்யாவை ஏன் தூக்கி சுத்தின

ரம்யாவை ஏன் தூக்கி சுத்தின

ரியோ போலவே தேங்யூ சொல்வது, நானும் நேஷனல் டெலிவிஷன்ல வந்துட்டேன்னு சொல்லி கலாய்ப்பது என ரியோ பேசிய முக்கியமான விஷயங்களை பேசி வெறுப்பேற்றிய ஸ்ருதி, நண்பர்களின் கடுப்பு எனக் கூறி, ரம்யாவை ஒரு எபிசோட்ல ஏன் தூக்கி சுத்தின என்பதையும் கேட்டு விட்டார். இது நண்பர்கள் கடுப்பா இல்லை உன் கடுப்பா என கேட்டு ஸ்ருதியிடம் நறுக்கென கிள்ளு வாங்கிக் கொண்டார் ரியோ.

ஏன் ஆஃப் ஆயிட்ட

ஏன் ஆஃப் ஆயிட்ட

ஆரம்பத்தில் நல்லா ஜாலியா இருந்துட்டு இருந்த, அப்புறம் ஏன் திடீர்னு ஆஃப் ஆகிட்ட, இப்படி இருக்காத பழையபடி ஃபன் பண்ணு இன்னும் 3 வாரம் தான் நல்லா எல்லாருடனும் ஹேப்பியா விளையாடிட்டு வா என ரியோவை உற்சாகப்படுத்தியும் அதே போல அவரது திசையை திருப்பியும் அழகாக மோட்டிவேட் செய்தார் ஸ்ருதி.

அப்பா வா.. வான்னு கூப்பிடுறா

அப்பா வா.. வான்னு கூப்பிடுறா

அப்படியே உன் வாய் தான், அப்பா வா.. வான்னு கூப்பிடுறா, அவளே தனியா எதையும் பிடிக்காம கொஞ்சம் நேரம் நிக்கிறா என ஸ்ருதி சொன்னதும், 5 மாதத்திலேயேவா.. என அந்த அழகான தருணங்களை கண்டு ரசிக்க முடியாத ஒரு அப்பாவின் ஏக்கத்தை அப்படியே வெளிப்படுத்திய இடத்தில் ரியோ ஸ்கோர் செய்து விட்டார்.

ஆரி பிரதர் ப்ளீஸ்

ஆரி பிரதர் ப்ளீஸ்

இதுவரை ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்தவர்கள் எல்லாம் ஆரியை பற்றி பேசாமல் செல்லவே இல்லை. அந்த அளவுக்கு எல்லா பிக் பாஸ் ரசிகர்களும் ஆரியை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். ரியோவின் மனைவியும் ஆரி பிரதர் ப்ளீஸ் ரியோ கூட சண்டை போடாதீங்க, எல்லாரும் ஜாலியா ஃபன் பண்ணுங்க, அது தான் பார்க்க நல்லா இருக்கு என்றும் சொல்லி விட்டு வந்தார்.

ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை

ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை

மேலும், கடைசியாக மீண்டும் ரியோவுக்கு முத்தமிட்ட அவரது மனைவி ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை.. ஹேப்பி இரு என சூப்பரான அட்வைஸ் கொடுத்து விட்டு சென்றார். உன் கூடவே நானும் வந்திடவா என்று ரியோ கேட்டதும், டைம் முடிந்து விட்டது நீங்க கிளம்புங்க என பிக் பாஸ் சொல்லும், போது போக மாட்டேன்னு ஸ்ருதி அடம்பிடித்ததும் வேற லெவல் லவ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X