நெகிழ வைத்து விட்டது.. டாஸ்க்கில் இருக்கும் போது ரியோவுக்கு வந்த மனைவி மற்றும் குழந்தையின் வீடியோ!

சென்னை: நடிகர் ரியோ ராஜின் மனைவி ஸ்ருதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிக் பாஸ் டிவியில் ஒளிபரப்பான ஸ்பெஷல் வீடியோ ரசிகர்களை கடைசியாக நெகிழ வைத்து விட்டது.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task

முன்னதாக நடிகர் ஆரியின் திருமண நாளை முன்னிட்டு அவரது மனைவி வீடியோவும் பால் கொழுக்கட்டையும் கொடுத்து அனுப்பி இருந்தார்.

மணிக்கூண்டு டாஸ்க்கில் நின்று கொண்டிருந்த போது ரியோவின் மனைவியின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

குடும்பத்தை பிரிந்து

குடும்பத்தை பிரிந்து

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் தங்கள் மனைவி, கணவன், குழந்தைகள், பெற்றோர்கள் என அனைத்து சொந்தங்களையும் பிரிந்து இங்கே 100 நாட்கள் தங்கும் முயற்சியில் வருகின்றனர். அதனால், அடிக்கடி குடும்ப உறவினர்களின் விஷேச நாட்கள் மற்றும் போட்டியாளர்களின் விஷேச நாட்களில் ஸ்பெஷல் வீடியோ அகம் டிவியில் ஒளிபரப்பப்படும்.

அழுகை ஆர்ப்பரிக்கும்

அழுகை ஆர்ப்பரிக்கும்

பல நாட்கள் குடும்பத்தை பிரிந்து பிக் பாஸ் வீட்டில் புது புது நபர்களிடம் உறவு, சண்டை என போட்டாலும், ஒரு நொடி தங்களின் குடும்பத்தை வீடியோ மூலம் பிக் பாஸ் வீட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டால் போதும், போட்டியாளர்களுக்கு கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும்.

போன் இல்லை

போன் இல்லை

வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ குடும்பத்தை விட்டுச் சென்றால் கூட செல்போன் மூலம் வீடியோ கால் போட்டு பேசி விடலாம். ஆனால், பிக் பாஸ் வீட்டில் வீடியோ கால் மட்டுமல்ல, போன் பண்ணி கூட பேச முடியாது. அதனால், குடும்பத்தினர் அனுப்பும் ஒரு சின்ன வீடியோ மெசேஜும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் தான்.

ரியோ மனைவியின் பிறந்தநாள்

ரியோ மனைவியின் பிறந்தநாள்

நடிகர் ரியோ ராஜின் மனைவி ஸ்ருதி ரியோவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல் நாள் எபிசோடில், மண்ணில் ஹார்ட் எல்லாம் போட்டு, ஹேப்பி பர்த்டே சொல்லி இருந்தார் ரியோ. முதல் முறையாக உன்னையும் ரிதி பாப்பாவையும் ரொம்ப மிஸ் பண்றேன் என்றார்.

ரியோவுக்கு வந்த சோதனை

ரியோவுக்கு வந்த சோதனை

மணிக்கூண்டு டாஸ்க்கில் இருக்கும் போது, திடீரென மனைவி ஸ்ருதியின் வீடியோ பிக் பாஸ் டிவியில் ஒளிபரப்பானது. மணிக்கூண்டில் இருந்து இறங்குவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் அங்கேயே மனம் நொந்து சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ரியோவுக்கு அப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாது.

ஓடி வந்து கலங்கி நின்றார்

ஓடி வந்து கலங்கி நின்றார்

ஆனால், அர்ச்சனா அக்கா, ரியோ தம்பி ஓடி வா.. என சொன்னதும், அடுத்த நபரிடம் பொறுப்பை கொடுத்து விட்டு, ஓடோடி வந்த ரியோ தனது மனைவியையும் குழந்தையையும் டிவியில் பார்த்த உடனே அங்கேயே ஸ்தம்பித்து நின்று கலங்கினார். ரியோ ராஜ், மற்றவர்கள் போல ஓவராக சீன் போட்டு அழுவாமல் நின்றதை பார்த்த ரசிகர்கள் வெகுவாக அவரது ஃபீலிங்கை பாராட்டி வருகின்றனர்.

குழந்தை ரிதி

குழந்தை ரிதி

2017ம் ஆண்டு நடிகர் ரியோ ராஜுக்கும் ஸ்ருதிக்கும் திருமணம் ஆனது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி, இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. ரிதி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த குழந்தையையும், மனைவியையும் பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரியோவுக்கு, மனைவியின் பிறந்தநாள் வீடியோ மெசேஜ் பொக்கிஷம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X