ஆள விடுங்கடா சாமி.. எஸ்கேப் ஆன ஹீரோக்கள்.. பாவம் பிக் பாஸ்க்கு சிக்கிய ஒரே ஹீரோ இவர் தானாம்!
சென்னை: இந்த முறை பிக் பாஸ் தமிழ் சிசனில் எந்த இளம் ஹீரோ, எந்த இளம் ஹீரோயின் கலந்து கொள்ளப் போகின்றனர் என்கிற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மனங்களை ஆட்டிப் படைத்து வருகிறது.
ஹரிஷ் கல்யாண், மகத் இடங்களை இந்த 4வது சீசனில் நிரப்பப் போகும் அந்த நபர் யார் என்கிற கேள்விக்கு இப்போ விடை கிடைத்திருக்கிறது.
விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான இளம் ஹீரோ ஒருவர் தான் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் டஃப் போட்டியாளராக இருக்கப் போகிறார்.

தெறித்து ஓடிய ஹீரோக்கள்
பல இளம் ஹீரோக்கள் பிக் பாஸா.. ஏற்கனவே கொரோனா லாக்டவுன் காரணமா 4 மாசம் வீட்டுல அப்படி தான் லாக் ஆகி கிடந்தேன். நீங்க எவ்ளோ கொடுத்தாலும், வேண்டாம் சாமி என தெறித்து ஓடி வருகிறார்கள். இளம் நடிகைகளையும் பிடித்து வீட்டில் அடைக்க பிக் பாஸ் குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

விஜய் டிவி பிரபலம்
இந்நிலையில், தற்போது நடிகர் ரியோ ராஜ் தான் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகும் இளம் ஹீரோ என்கிற சூப்பரான ஹாட் தகவல் கிடைத்துள்ளது. சன் மியூசிக் விஜேவான ரியோ ராஜ், விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்
விஜய் டிவியில் பிரபலமான காலத்தில் ஏற்பட்ட நட்பின் காரணமாக, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் நடிகர் ரியோவுக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. தனது அசத்தலான நடிப்பின் மூலம் தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் ரியோ.

பிளான் பண்ணி பண்ணனும்
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பிளான் பண்ணி பண்ணனும் எனும் படத்தில் நடிகை ரம்யா நம்பீசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. தனது மூன்றாவது படத்தை தொடங்குவதற்கு இன்னும் நேரம் இருப்பதால், இடைபட்ட நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
Recommended Video

காமெடிக்கு பஞ்சமிருக்காது
நடிகர் ரியோ ராஜ் கலந்து கொண்டால் காமெடிக்கு பிக் பாஸ் வீட்டில் பஞ்சமே இருக்காது என்றும், அமுத வாணனும் இவரும் இணைந்து விட்டால், மற்ற போட்டியாளர்களை பங்கமாக கலாய்ப்பது நிச்சயம் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அக்டோபர் தொடக்கத்தில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை காண ஏகப்பட்ட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











