என் புருஷனை கோமாளி என்று சொல்வதால் எனக்கு சந்தோஷம்தான்.. ரியோ மனைவி உருக்கம்!

சென்னை: தன்னுடைய கணவரை கோமாளி என்று கூறுவதால் தனக்கு மகிழ்ச்சிதான் என ரியோவின் மனைவி ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரியோ ஆரம்பத்தில் இருந்தே ஒரு குரூப்புக்குள் அடைப்பட்டுள்ளார். குரூப்பிஸம் இருக்கு என்று சுரேஷ் சக்கரவர்த்தி சொன்னதால் அவரிடம் எகிறினார்.

ஆனால் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பும் சரி, அவர் சென்ற பிறகும் சரி ரியோ குரூப்பிஸம் செய்ததும், அதை ஒப்புக்கொள்ளாமல் இருந்ததும் ரசிகர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது.

கண்டும் காணாமல்

கண்டும் காணாமல்

ரியோ குரூப்பிஸம் செய்வதாகவும், தனக்கு வேண்டியர்கள் என்ன தவறு செய்தாலும் அதை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. வேண்டாதவர்கள் சின்ன விஷயம் செய்தால் கூட அதை பெரிதாக்கி பேசுகிறார் என்றும் ரசிகர்கள் விளாசினர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

அதிலும் குறிப்பாக அவர், ஆரியிடம் நடந்து கொள்ளும் விதம் பச்சையாக குரூப்பிஸம் என்று தெரிகிறது. சில நேரங்களில் நியாயத்துக்கு புறம்பாக ஹவுஸ்மேட்டுகளை நாமினேட் செய்வது, வாக்குவாதம் செய்வது என எரிச்சல் படுத்துகிறார்.

கோமாளித்தனமாக

கோமாளித்தனமாக

மேலும் புரணி பேசுவதையும் தன்னை யாரும் கெட்டவன் என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காக பின்னால் சென்று விளக்கம் கொடுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரியோவை கோமாளி என்றும் அவர் செய்யும் சில செயல்கள் கோமாளித்தனமாக இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

ஸ்ருதி

ஸ்ருதி

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு ரியோவின் மனைவியான ஸ்ருதி உருக்கமாக பதிலளித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், சில பேர் ரியோவை கோமாளி என்று கூறி இழிவுபடுத்த முயற்சிப்பதை பார்க்கிறேன். நான் உண்மையில் சந்தோஷப்படுகிறேன்.

கோமாளியாகவே இருங்கள்

கோமாளியாகவே இருங்கள்

தன்னுடைய வலிகளை மறைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பவரை நேசிப்பதில் பெருமை படுகிறேன். நீங்கள் வெறுப்புக்கு அப்பால் பிரகாசிக்கிறீர்கள் என் அன்பே! ஒரு கோமாளியாகவே இருங்கள். ஒரு உத்வேகமாக இருங்கள்!

ஈஸி கிடையாது..

ஈஸி கிடையாது..

கோமாளி என்பது ஒரு எண்டெர்டெய்னருக்கு வழங்கப்படும் ரொம்பவே மதிப்புமிக்க ஒரு டைட்டில்.. உண்மையிலேயே ஒருவரை சிரிக்க வைப்பதும், ஃபன் பண்ணுவதும் அவ்ளோ ஈஸியான விஷயம் இல்லை. ஆகையால் ரியோவை யாரெல்லாம் கோமாளி என்கிறீர்களோ, நீங்கள் அவரின் நகைச்சுவையை மறைமுகமாக புகழ்வதாக எடுத்துக் கொள்கிறேன்.

எதிர்ப்பை தாண்டி..

எதிர்ப்பை தாண்டி..

ட்ரூ எண்டெர்டெய்னர்.. அன்பையும் பாஸிட்டிவிட்டியையும் பரப்புங்கள்.. எதிர்ப்பை தாண்டி பிரகாசியுங்கள் ரியோ ராஜ் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ட்ரூ எண்டெர்டெய்னர்.. அன்பையும் பாஸிட்டிவிட்டியையும் பரப்புங்கள்.. எதிர்ப்பை தாண்டி பிரகாசியுங்கள் ரியோ ராஜ் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X