மீண்டும் ஆரியை நோண்டும் ரியோ.. அவர் மேல மரியாதை இருந்துச்சு.. ஆனால்.. என்ன ஆக போகுதோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் ஆரியை புகழ்ந்து தள்ளும் நிலையில் அவரை மீண்டும் சீண்டியுள்ளார் ரியோ.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பவர் ஆரி.
என்னதான் ஹவுஸ்மேட்ஸ் அவரை திட்டி தீர்த்தாலும் முக்கால்வாசி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவே உள்ளனர்.

ஆரிக்கே ஆதரவு
ரசிகர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களின் உறவினர்களுமே ஆரியை தங்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் இதுவரை வந்துள்ள 5 போட்டியாளர்களில் பாலாஜி சகோதரரை தவிர மற்ற அனைவருமே ஆரிக்குதான் ஆதரவாய் இருந்துள்ளனர்.

ஆரியை சீண்டும் ரியோ
ஆனால் அர்ச்சனா வெளியேறியதில் இருந்தே ஆரிதான் அதற்கு காரணம் என அவரை கட்டம் கட்டி வரும் ரியோ, ஆரி என்ன செய்தாலும் அவரைதான் சீண்டி வருகிறார். கடந்த 2 வாரங்களாக ஆரி மீது வன்மத்தை கக்கி வருகிறார் ரியோ.

டார்ச்சர் பண்றாரு
இந்நிலையில் நேற்றைய எபிசோடிலும் ஆரிக்கு கிடைக்கும் ஆதரவை டேமேஜ் செய்யும் வகையில் பேசினார். அதாவது கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் சோம் மற்றும் கேபியுடன் ஆரி பற்றி பேசும் ரியோ, நீங்க கரெக்ட்தான் அதுக்காக ஏன் மத்தவங்கள போட்டு டார்ச்சர் பண்றீங்கங்றது தான் என் கோபம் என்கிறார்.

கரெக்ட்டுன்னு சொல்ல மாட்டேன்
நமக்கு இங்க ஹார்ஷா தெரியறது வெளியிலேயே இருந்து பார்க்கும் போது ஹார்ஷா தெரிய வாய்ப்பில்லை. ஒரு மணி நேரத்தில் அவர் பேசும் பாயிண்ட்ஸ் மட்டும் வரும் போதும் அது கரெக்ட்டா தான் தெரியும். அவர் பேசுறது எல்லாமே கரெக்ட்டுன்னு நான் சொல்ல மாட்டேன்.

மரியாதை இருந்துச்சு
சிலது உண்மையிலேயே கரெக்ட்தான். சில வாரங்கள் வரைக்குமே எனக்கு அவர் மேல பெரிய மரியாதை இருந்துச்சு.. இன்னுமே அந்த மரியாதையெல்லாம் இருக்கு.. அதெல்லாம் போகல.. ஆனா கொஞ்ச வாரங்களுக்கு பிறகு அவரு நசுக்குறார் தோனுச்சு.. இப்பவும் அவரு மத்தவங்களை நசுக்குறாருன்னு தான் நினைக்கிறேன். ஆனா வெளியே டீட்டெயிலா தெரியாது.. என ஆரியை டேமேஜ் செய்யும் வகையில் பேசியுள்ளார் ரியோ.


Click it and Unblock the Notifications











