பாலாவ ட்ரிகர் பண்றாங்க.. பல்ஸை பிடித்த ரியோ.. அட்வைஸ் பண்ணிய சம்யுக்தா.. என்னவோ போங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியை அவருடைய கூட்டாளிகள் ஏத்தி விடுவதாக கூறியுள்ளார் ரியோ.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வீட்டு பத்திரத்திற்காக நடைபெற்ற சண்டைதான் பெரும் சண்டையாக இருந்தது.
சோமிடம் இருந்த பத்திரத்தை திருடி வைத்துக்கொண்டு பாலாஜி ஹவுஸ்மேட்ஸ்களை திணறவிட்டார். இதனால் சனம் உட்பட பலரும் அவரை சமாதானப்படுத்த முயன்று தோல்வியில் முடிந்தது.

டவுட் பண்றாங்க
இந்நிலையில் பாலாவை ஹானஸ்ட்டா பதில் சொல்லு என்று கேபி கூறியதை கேட்டு அதற்கு பாலாவும் பதில் சொல்லி விட்டு சென்று விட்டார். ஆனால் வெளியில் சென்ற பாலாவிடம் உங்களின் ஹானஸ்ட்டை டவுட் பண்றாங்க என்று கூறி சுச்சியும் ஷிவானியும் ஏற்றிவிட்டனர்.

ஹவுஸ்மேட்ஸ் விவாதம்
இதனைக்கேட்ட பாலா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் தாம்தூம் என குதித்தார். பாலாவின் அலறல் சத்தத்தால் பிக்பாஸ் வீடே மிரண்டுபோனது. பாலா வெளியில் சென்ற பிறகு அந்த பிரச்சனை குறித்து ஹவுஸ்மேட்ஸ் விவாதித்தனர்.

கோபப்பட வேண்டாம்
மேலும் பாலா இப்படி நடந்துகொள்ளும் ஆள் இல்லை, ஆகையால் அவன் மீது கோபப்பட வேண்டாம் என்றும் கூறினார். இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்ட சம்யுக்தா பின்னர் வெளியே சென்று, பாலாஜிக்கு அட்வைஸ் கூறினார்.

உன்னை ஏத்தி விடுகிறார்
அதாவது, நீ பேசியது ஓகே பாலாஜி. ஆனால் சுச்சி உன்னை ஏத்தி விடுகிறார். அவர் பேச்சை கேட்டு நடந்து கொள்ளாதே என்றார். இதனைக் கேட்ட பாலாஜி, அது எனக்கும் தெரிகிறது. என் பிரச்சனையை நானே பேசிக்கொள்வேன், எனக்கு சப்போர்ட்டாய் யாரும் பேசுவது பிடிக்காது என்றார்.

பாலாஜியுடன் செல்ல சண்டை
இதனைக் கேட்ட ஷிவானி கோபித்துக் கொண்டார். நான் உங்களுக்காக பேசவில்லை. எனக்காக தான் பேசினேன் என்றார். இதனால் பதறிய பாலாஜி, நான் உன்னை சொல்லவில்லை என்று ஷிவானியை சமாதானப்படுத்தினார். ஆனாலும் ஷிவானி பாலாஜியுடன் செல்லமாக சண்டை போட்டப்படியே இருந்தார்.


Click it and Unblock the Notifications











