அச்சச்சோ.. மொட்டை அங்கிளிடம் மல்லுக்கட்டும் ரியோ.. இதான் ரியல் ஃபேஸா.. பயங்கர டிவிஸ்ட்டால்ல இருக்கு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் பல அதிரடி திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோட் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பகீர் கிளப்பும் புரமோ
பார்க்கும் போதே பகீர் கிளப்பும் வகையில் உள்ளது இரண்டாவது புரமோ. அதாவது வீட்டின் கேப்டனான சுரேஷ் சக்கரவர்த்தியிடம் யாரெல்லாம் மாஸ்க்கு போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் என கேட்கிறார் பாலாஜி முருகதாஸ்.

சொல்லக்கூடாது
அதற்கு பதில் சொல்லும் சுரேஷ் சக்கரவர்த்தி, ரியோவை எடுத்துக்காட்டாக கூறுவதாக தெரிகிறது. இதனால் கடுப்பபான ரியோ, அவர் கேட்ட கேள்விக்கு என்னை எக்ஸாம்பிளாக சொல்லி பதில் சொல்லாதீங்க. சொல்லக்கூடாது என செம ஸ்ட்ரிக்ட்டாக கூறுகிறார்.

அவசியமே இல்லை
முகத்தை டெரராக வைத்துக் கொண்டு சொல்லாதீங்க என்று கூறும் ரியோ, கோப முகத்துடன் நான் மறைக்க நினைக்கும் முகம் இதுதான் என கூறுகிறார். மேலும் யார வேணா அவர் எக்ஸாம்பிளாக சொல்லலாம், இதை சொல்லனும்னு அவசியமே இல்லை என்று பாலாஜியிடம் ஆர்க்யூ செய்கிறார் ரியோ.

கடுப்படிக்கும் ரியோ
அதற்கு பதில் கூறும் சுரேஷ் சக்கரவர்த்தி நீங்கள் சொன்னதை நல்லபடியாக சொல்கிறேன், எல்லாருக்கும் இரண்டு முகம் இருக்கும் என்று என்கிறார். அப்போதும் கோப முகத்துடன் தேங்க்யூ தேங்க்யூ என கடுப்படிக்கிறார் ரியோ. இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.

முகத்திரை கிழிகிறது
பார்க்கும் போதே மிரள வைக்கும் வகையில் உள்ளது இந்த புரமோ. வந்த நாள் முதல் அமைதியாக இருந்த ரியோ தற்போது சீறத் தொடங்கியுள்ளார். எல்லாவற்றிற்கும் சிரித்தப்படியே சமாளித்து கேலியும் கிண்டலுமாய் இருந்த ரியோ தற்போது கோபப்பட்டிருப்பதன் மூலம் அவரது முகத்திரையும் கிழியத் தொடங்கியிருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











