For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மைண்ட் யுவர் வோர்டுஸ் பாலா.. உன்னை மதிக்கவேயில்ல..ஆவேசமான ரியோ..மீண்டும் அதகளப்பட்ட பிக்பாஸ் வீடு!

    |

    சென்னை: பாலா கூறிய வார்த்தையால் ஆவேசமான ரியோ, உன்னை யாரும் இங்கே மதிக்கவே இல்லை என விளாசி விட்டார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ், வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் சீண்டி வருகிறார்.

    தான் மட்டும் தான் பர்ஃபெக்ட் என்பதை போல எல்லோரையும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் அசிங்கப்படுத்தி வருகிறார்.

    மூக்கை நுழைக்கும் பாலா

    மூக்கை நுழைக்கும் பாலா

    குறிப்பாக ஆரியையும் அர்ச்சனாவையும் வச்சு செய்து வருகிறார். தான் பேசும்போது மற்றவர்கள் மூக்கை நுழைக்கக் கூடாது என்று சொல்லும் பாலாஜி, மற்றவர்கள் பேசும் போது முதல் ஆளாய் தான் மூக்கை நுழைக்கும் வேலையைதான் பார்க்கிறார்.

    வரிந்துக்கட்டிய சோம்

    வரிந்துக்கட்டிய சோம்

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கால் செண்டர் ஊழியராக இருந்த பாலாஜி, அர்ச்சனாவிடம் பேசும் போது சோம், கேபி, ரியோ என அனைவரையும் அடித்து விட்டார். டாஸ்க் முடிந்து உள்ளே வந்த அவரிடம் சோம் தன்னை எப்படி டிராமா என்று சொல்லலாம் என விளாசினார்.

    கார்னர் பண்றீங்க

    கார்னர் பண்றீங்க

    தொடர்ந்து கேபியும் எனக்கு அர்ச்சனா அக்கா சப்போர்ட் பண்றாங்கன்னு எப்படி சொல்லலாம் என்று கேட்டு ஏறி விட்டார். இதனை எதிர்பார்க்காத பாலாஜி, எல்லாரும் கேங்கா சேர்ந்து என்ன கார்னர் பண்றீங்க என்றார்.

     மைண்ட் யுவர் வோர்டுஸ்

    மைண்ட் யுவர் வோர்டுஸ்

    அதுவரை பேசாமல் இருந்த ரியோ, ஆவேசமாகிவிட்டார். மைண்ட் யூவர் வோர்டுஸ் பாலாஜி, இதுவரைக்கும் நான் எதுவும் பேசல நீங்க எப்படி, கேங்கா சேர்ந்து கார்னர் பண்றோம்னு சொல்லலாம். நீ யார் யார் பத்தி பேசுனீயோ அவங்கதான் உன்னை கேட்குறாங்க.

    மதிக்கவே இல்ல

    மதிக்கவே இல்ல

    நான் ஏதாவது பேசினேனா? உன்னைதான் இங்கே மதிக்கவே இல்லையே என கிழித்து விட்டார். அதற்கெல்லாம் அசராத பாலாஜி, மதிக்கவே கிடையாது இல்ல அப்புறம் ஏன் பேசுறீங்க என்றார். உடனே சோம் எதுக்கு என்னை டிராமான்னு சொன்ன என்று அதைத்தானே கேட்டேன் என்று கேட்க அது பார்க்குற ஆடியன்ஸ்க்கு தெரியும் என்றார்.

    என்ன ஹீரோவா?

    என்ன ஹீரோவா?

    உடனே ரியோவும் ஆமாம் ஆடியன்ஸுக்கு தெரியும் என்று கூற, கத்தாம பேசுங்க என்று அடக்கினார். அதை நீங்க சொல்லாதீங்க என்று ரியோ கூற , என்ன ஹீரோவா? என்று கேட்டு வெறுப்பேற்றினார் பாலாஜி. அதற்கு ஆமாம் ஹீரோதான் என்று ரியோ சொல்ல, நானும் ஹீரோதான் என்றார் பாலாஜி.

    அக்கா இல்ல அர்ச்சனா

    அக்கா இல்ல அர்ச்சனா

    மொத்தமா சேர்ந்து எல்லாரும் என் மேல பழி போடணும் அதானே, என பொதுவாய் பேசினார். மேலும் சோமிடம் அர்ச்சனா குறித்து பேசினார். அப்போது அர்ச்சனா அக்கா என்று அவர் சொல்ல, அக்கா என்று கூப்பிடாதே அர்ச்சனா என்று சொல் என படு கோபமாக பேசினார்.

    English summary
    Rio anger over Balaji's talks. Rio shouted at Balaji that mind your words.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X