அறிவே இல்லையா.. அங்க போயா கட்டிப்பிடிப்பீங்க.. ஷிவானி, ரம்யாவை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ண அன்பு கேங்!

சென்னை: பிசிக்கல் டாஸ்க் என்று வந்தாலே கில்லி என நினைத்துக் கொண்டிருந்த பாலா முதல் ஆளாக அவுட்டாகி வெளியேறினார்.

அவர் பின்னாடியே ஆரி, ரியோ, கேபி மற்றும் சோம் அவுட்டாகி திரும்பினர்.

கடைசி வரை ஷிவானியும் ரம்யாவும் கயிற்றை விடாமல் பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, கேபி, ரியோ, சோம் போய் கட்டிப்பிடித்ததை பார்த்த ரசிகர்கள் அறிவே இல்லையா? என திட்டி வருகின்றனர்.

ஹக் பைத்தியங்கள்

ஹக் பைத்தியங்கள்

பிக் பாஸ் முதல் சீசனில் கட்டிப்பிடித்த ஒரே காரணத்திற்காக சிநேகனுக்கு கட்டிப்பிடி வைத்தியர் என்றே பெயர் வைத்த்னர். இந்த சீசனில் அன்பு கேங்கை சேர்ந்த ரியோ, சோம் மற்றும் கேபி எப்போ பார்த்தாலும் இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்துக் கொண்டே சுற்றும் ஹக் பைத்தியங்களாகவே மாறிவிட்டனர்.

ரியோவுக்கு பட்டப்பெயர்

ரியோவுக்கு பட்டப்பெயர்

இதனால், ரியோவுக்கு குட்டி சிநேகன் என்றே பெயர் வைத்து விட்டனர் பிக் பாஸ் ரசிகர்கள். ரம்யா பாண்டியனை கட்டிப்பிடித்து தூக்கியதை அவருடைய மனைவியே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து ரெண்டு அடி கொடுத்தே சொல்லி அசிங்கப்படுத்தி விட்டு சென்றார். ஆனாலும், அந்த அன்பை பறிமாறிக் கொள்வதை அவர் விடவே இல்லை.

சிங்கப்பெண்கள்

சிங்கப்பெண்கள்

சண்டை போட்டுக் கொண்டு சட்டென அவுட்டான மற்றவர்களை பற்றி கவலைப்படாமல், எதிலும் டிஸ்ட்ராக்ட் ஆகாமல் சிங்கப்பெண்களாக ரம்யா மற்றும் ஷிவானி கடைசி வரை கயிற்றை விடாமல் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்களை தூரத்தில் இருந்து பாராட்டினால், போதும் கிட்ட வந்து டிஸ்டர்ப் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தான் தெரியவில்லை.

கண்ணீர் விட்ட ரம்யா

கண்ணீர் விட்ட ரம்யா

அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே மரண வலியில் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவரை அழாத ரம்யாவே இந்த டாஸ்க்கில் கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்து விட்டார். மறுபுறம் ஷிவானியின் கண்கள் வெளியே வந்து விழுந்துவிடும் போல அப்படியொரு வலியுடன் அந்த இடத்தில் இருந்து தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது குறுக்கே புகுந்து தொல்லை கொடுப்பது சரியான விளையாட்டு அல்ல.

அறிவு இருக்கா

அறிவு இருக்கா

ரம்யாவும், ஷிவானியும் சூப்பராக விளையாடியதற்கு அவங்க கேம் முடிந்து கீழே வந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் கட்டியணைத்து, தூக்கி கொஞ்சி பாராட்டுங்கள், அதை விட்டு விட்டு, அவங்க கேம் ஆடிட்டு இருக்கும் போதே, கிட்ட போய், கேபி, ரியோ மற்றும் சோம் கட்டியணைத்து பாராட்டுவது எல்லாம் மோசமான செயல் என நெட்டிசன்கள் அவர்களை வச்சு விளாசி வருகின்றனர்.

யார் ஜெயிச்சா

யார் ஜெயிச்சா

இன்றைக்காவது இந்த டாஸ்க் முடிந்து ரேங்கிங் சொல்வாங்கன்னு பார்த்தால், பட்டென கேம் ஆடிக் கொண்டு இருக்கும்போதே, எண்ட் கார்டு போட்டுவிட்டு நிகழ்ச்சியை முடித்து விட்டனர். இனி, அடுத்த எபிசோடிலும் இது தொடரும், அப்போது தான் இருவரில் யார் ஜெயிச்சா என்பது தெரியவரும், இந்த வாரம் வெளியேற போகும் ஷிவானி தான் ஜெயிப்பாங்கன்னு தெரியுது பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X