என்ன ரியோ.. இந்த வாரம் நீ பர்ஃபாமன்ஸ் பண்றியா? நாட்கள் ஆக ஆக எல்லோர் மூஞ்சும் ரண கொடூரமா மாறுதே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் ரொம்பவே கோபமாக பேசுகிறார்.
என்னை எடுத்துக்காட்டாக சொல்லாதீர்கள் என அவரிடம் முகத்தில் அடிப்பது போன்று ரொம்பவே ரூடாக சொல்கிறார். ரியோவின் முகத்தை பார்க்கவே பயமாக உள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர். ரியோவா இப்படி பேசுவது என அதிர்ச்சியடைந்துள்ளனர். ரியோவின் முகத்தையும் அவர் பேசும் விதத்தையும் பார்த்த நெட்டிசன்கள் இப்போதுதான் ஒவ்வொருவரின் ஒரிஜினல் முகமும் வெளியே வருகிறது என கூறியுள்ளனர்.

ரண கொடூரமா மாறுதே..
புரமோவை பார்த்து மிரண்டு போன இந்த நெட்டிசன், நாட்கள் ஆக ஆக எல்லோர் மூஞ்சும் ரண கொடூரமா மாறுதே! என கிண்டலடித்துள்ளனர்.

பயங்கரமான டிவிஸ்ட்தான்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் யாரு பேசுறது.. நம்ம ரியோ ராஜா இது.. ஆனா இந்த விஜய் டிவியை நம்ம நம்பவே கூடாது. புரமோ ஒரு படமா இருக்கும் எபிசொட் வேற படமா இருக்கும்.
பொறுத்து இருந்து பார்க்கலாம். ஆனா இது கொஞ்சம் எதிர்பார்க்காத பயங்கரமான ட்விஸ்ட்தான் என்கிறார் இந்த நெட்டிசன்.

மிரண்ட நெட்டிசன்
புரமோவில் ரியோ பேசுவதை பார்த்து மிரண்டு போன இந்த நெட்டிசன், எது.. விஜய் டீவி ரியோவா? என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.

பயமுறுத்துறீங்க..
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னங்கையா ஆரம்பத்திலேயே இப்படி பயமுறுத்துறீங்க! என கேட்டு தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தண்ணி அடிச்ச மாதிரி பேசுறாரு?
பிக்பாஸின் இரண்டாவது புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் என்னய்யா பெரியபாசு... இந்த ரியோ தண்ணி அடிச்ச மாதிரி பேசுறாரு? என கேட்டுள்ளார்.

காஞ்சனா பேய்ங்க..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளரையும் பார்த்த இந்த நெட்டிசன், நல்லா பாருங்க எல்லாம் காஞ்சனா பேய்ங்க! என கூறியுள்ளார்.

இன்னும் அது வரலையே
பிக்பாஸில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் மட்டுமே நடந்து வருகிறது. இதுவரை காதல் க்ரஷ் என எந்த பேச்சும் அடிப்படவில்லை. இதனால் கவலைப்பட்ட இந்த நெட்டிசன், இன்னும் காதல் சீனே வரலையே பிக்பாஸ்? என கேட்டுள்ளார்.

என்னடா செய்ய?
மற்றொரு நெட்டிசனான இவர், சுரேஷ் சக்கரவர்த்தியின் தற்போதைய நிலை என, மொட்டை ரைட் நவ், என்று அய்யோ நம்ம எது பேசினாலம் அது பஞ்சாயத்துல போய் முடியுதே இப்ப என்னடா செய்ய... என கூறுவது போல மீம்ஸ் வெளியிட்டுள்ளார்.

டவுட்டா இருக்கே..
என்னப்பா ரியோ எக்ஸாம்பிள்ல உன்னை சொன்னதுக்கே பொசுக்குனு கோபப்பட்டுட்ட.. நீ எவ்வளவு பேர கேவலமா கலாச்சியிருப்ப அதை எல்லாம் என்ன சொல்லுறது....
எனக்கு என்னமோ விஜய் டிவியும் சாண்டியும் உன்னை சரியா ட்ரெய்ன் பண்ணலையோனு டவுட்டா இருக்கே என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ரியோ பர்ஃபாமன்ஸா?
கடந்த வாரம் முழுக்க அனிதா சம்பத்தும் சனம் ஷெட்டியும் செம பர்ஃபாமன்ஸ் பண்ணி புரமோ, எபிசோட் என எல்லாவற்றிலும் இடம் பிடித்தார். அதனை குறிப்பிட்டு, என்ன ரியோ... இந்த வாரம் நீ பர்ஃபாமன்ஸ் பண்றியா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











