ஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல!

சென்னை: புரமோவில் அந்த ஆட்டம் ஆடி பாலாவை வெறுப்பேற்றிய அந்த போர்ஷன் நிகழ்ச்சியில் இன்னமும் சில எக்ஸ்ட்ரா பர்ஃபார்மன்ஸ்களுடன் களை கட்டியது.

அர்ச்சனா வந்த உடனே தலைவலி என சொன்ன பாலா, தொடர்ந்து அவரை அட்டாக் பண்ணி வருகிறார்.

பாலாவின் அட்டாக்கிற்கு சளைக்காமல் கவுன்ட்டர் அட்டாக் கொடுத்து வந்த அர்ச்சனாவுக்கும் அவருக்கும் இன்னைக்கு சரியா முட்டிக்கிச்சு.

தூங்குனது ஒரு தப்பாடா

தூங்குனது ஒரு தப்பாடா

பிக் பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் பாலா தூங்கும் போது, அத்தனை பேர் குச்சி தொடப்பத்தை வைத்துக் கொண்டு அந்த ரூமை க்ளீன் பண்ணுவது போல போடுறதே, செம சீன், அதுக்கு வேக்குவம் க்ளீனர் வரவில்லை என ஒரு சாக்கு போக்கு வேற, அதில், பாலா வீட்டை பெருக்கவில்லை என்பதற்காக இப்படியொரு சண்டை தேவையே இல்லாத ஆணி.

ஓவர் ஆக்டிங் அர்ச்சனா

ஓவர் ஆக்டிங் அர்ச்சனா

சுரேஷ் தாத்தா தலைவராக இருக்கும் போதே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். ஆனால், அர்ச்சனா தலைவரான உடன் அதிகாரம் ரொம்பவே பறக்க ஆரம்பித்து விட்டது. அதிலும் பாலாவை எதிர்த்து பேசும் போது அவரோட பாடி லேங்குவேஜ் இருக்கே வேற லெவல். புரமோவை பார்த்தே ரசிகர்கள் அர்ச்சனாவிற்கு ஏகப்பட்ட அர்ச்சனைகளை வழங்கி விட்டனர்.

ஓவர் விஷம்

ஓவர் விஷம்

அர்ச்சனா அக்கா ஒரு பக்கம் வளைந்து குலைந்து ஆக்டிங் பண்ணி பாலாஜி முருகதாஸை டார்கெட் பண்ணா, அல்லக்கை ரியோ ராஜ் அதற்கு மேல ஓவராக குதித்து பாலா உடன் சரிக்கு சமமாக பேசுவது ரொம்பவே இரிடேட்டிங். ஓவர் விஷமா இருக்கானே ரியோ என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஒருத்தர் கூட பாலா பக்கம் நிக்கல

ஒருத்தர் கூட பாலா பக்கம் நிக்கல

அர்ச்சனா, ரியோவை தொடர்ந்து பாலாவை ஒட்டுமொத்த பேரும் டார்கெட் செய்யவே ஆரம்பித்தனர். பாலா பக்கம் யாருமே நிக்கல என்பது குறிப்பிடத்தக்கது. ஆஜீத் கூட ஆமாம் சாமி போட ஆரம்பித்து விட்டான். வேல்முருகன் நான் கூட்டிக்கிறேன் முதலில் அர்ச்சனாவிடம் சொல்லிட்டு பின்னர் பிளேட்டை திருப்பி போட்டார்.

எதிர்த்து நின்ற பாலா

எதிர்த்து நின்ற பாலா

அப்படித்தான் பேசுவேன், என்ன பண்ணுவீங்க, என அர்ச்சனா, ரியோ என யார் வந்தாலும் தனி ஆளாக எதிர்த்து நின்னு ஆட்டிட்யூட் காட்டினார் பாலா. பாலா ரசிகர்களுக்கு அவருடைய இந்த பேச்சு ரொம்பவே பிடித்துப் போயிருந்தாலும், இவ்ளோ திமிரா பேசக் கூடாது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X