Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடடா.. டைனிங் டேபிள் வரை வந்த குரூப்பிஸம்.. 3 பேரை கட்டம் கட்டும் ரியோ.. திருப்பிப்போட்ட ரம்யா!
சென்னை: ரம்யா உட்பட 3 பேரை குருப்பீஸம் என்று சொல்லி ரியோ கட்டம் கட்ட முயற்சிக்கும் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள் தோறும் ஒரு சண்டை, வாக்குவாதம், சென்டிமெண்ட், கண்ணீர் என இருந்து வருகிறது.
நேற்றைய எபிசோடில் சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தியை கடுமையாக பேசிய பிரச்சனையே இன்னும் அடங்கவில்லை.
என்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும் கேம் பிளானா?
இன்னும் காதில் கேட்கிறது
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான ரியோ மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பியுள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக கூறிய வார்த்தை இன்னும் தனது காதில் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறி பஞ்சாயத்து செய்ய முயற்சிக்கிறார்.
கால்ல விழுறேன்ல்ல
அதாவது, எல்லோரும் சேர்ந்து உட்காருங்கன்னு கால்ல விழுகிறேன்ல்ல என கோபமாக ஆரம்பிக்கிறார் ரியோ. அப்போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். 2 நிமிஷம் எல்லோரும் ஒன்னா உட்காந்து எந்திருச்சு போயிடலாம்.
வாயை திறந்த ஷிவானி
ஏன்னா திரும்ப திரும்ப குரூப்பிஸம் குரூப்பிஸம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.. என்கிறார் ரியோ. அதற்கு ஷிவானி என்னை பற்றி பேசனும்னா நேரா என்கிட்ட பேசுங்க என்கிறார். அதற்கு நீ, ரம்யா, ஆஜித் உங்க 3 பேர்கிட்ட பேசனு என்கிறார் ரியோ.
உங்க மைண்ட்ல குரூப்பிஸம்
அதற்கு பதில் சொல்லும் ரம்யா, நான் பேசிக்கிட்டுதான் இருக்கேன். உங்க மைண்ட்ல வேற ஏதோ இருக்கு.. உங்க மைண்ட்ல குருப்பீஸம் இருக்குங்றதால நீங்க இங்க கொண்டு வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியாது என்கிறார்.
திருப்பிப்போட்ட ரியோ
அதற்கு நக்கலாய் தேங்க்யூ தேங்க்யூ சோ மச் என கூறும் ரியோ, ஆமாம் நான்தான் மனசுல குரூப்பிஸம்னு வச்சுருக்கேன் என்று கூறுகிறார். அதற்கு நீங்கதானே இப்போ சொன்னீங்க நான் சொல்லலையே என திருப்பி போட்டு ரியோவை திணறடித்துள்ளார் ரம்யா.