சுரேஷ் சக்கரவர்த்தியை மிரட்டிய ரியோ.. பிக்பாஸ் ரவுண்ட் அப்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்கள் டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இதில் இடம்பெற்ற சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், சனம் ஷெட்டியின் ஃபேஷன் ஷோவை டுபாக்கூர் ஃபேஷன் ஷோ என பாலாஜி முருகதாஸ் கூறியதையும் அதற்கு கமல் கண்டனம் தெரிவித்ததையும் கூறியுள்ளார்.
இதேபோல் தான் சூப்பர் மாடல் இல்லை சீனியர் மாடல் என மீரா மிதுனை சீண்டிய சம்யுக்தா குறித்த தகவலையும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் அறந்தாங்கி நிஷா பிறந்த நாளை யாருக்கும் சொல்லவில்லை எனக்கூறி கேமரா மூலம் எல்லோருக்கும் சொன்னதையும் கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்டெர் ஆகப்போகும் அர்ச்சனா குறித்த தகவலையும் வழங்கியிருக்கிறார் பிகே. மேலும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தன்னை எடுத்துக்காட்டாய் கூறக்கூடாது என மிரட்டிய ரியோ குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











