எந்திரன் சிட்டின்னு நினைப்பு.. எடுத்த எடுப்பிலேயே ஏகப்பட்ட அசைன்மென்ட்.. இப்படி மிரட்டிட்டாரே ரியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய மனிதா டாஸ்க்கில் ரோபோக்களுக்கு எந்திரன் பட பாணியில் ஏகப்பட்ட அசைன்மென்ட்டுகளை கொடுத்து மிரளவிட்டார் ரியோ.

பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மனிதா என்ற தலைப்பில் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையிலான டாஸ்க்காக உள்ளது.

6 மனிதர்கள்

6 மனிதர்கள்

இதில் அர்ச்சனா தலைமையில் கேபி, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், ரம்யா ஆகிய 6 பேர் ரோபோக்களாக உள்ளனர். பாலாஜி தலைமையில் ஆரி, ரியோ, அனிதா, நிஷா, ஆஜித் ஆகிய 6 பேர் மனிதர்களாக உள்ளனர்.

பிக்பாஸ் கண்டிஷன்

பிக்பாஸ் கண்டிஷன்

மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து ரோபோக்களுக்கு மகிழ்ச்சி, கோபம், துக்கம் என ஏதாவது இரண்டு உணர்ச்சிகளை கொண்டு வர வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் பிக்பாஸ். இதனால் அனைத்து அஸ்திரங்களையும் கையில் எடுத்துள்ளனர் மனிதர்கள்.

டிரில் வாங்கிய ரியோ

டிரில் வாங்கிய ரியோ

அதன் ஒரு பகுதியாக அனைத்து ரோபோக்களையும் கார்டன் ஏரியாவில் நிற்க வைத்த ரியோ, எல்லோரும் ஒரு ஆர்ம் டிஸ்டன்ஸில் நிற்குமாறு கூறினார். அதன்படியே நின்ற ரோபோக்களை எந்திரன் பட வில்லன் ரோபோ பாணியில் உங்க கூட்டத்திலேயே ஒரு கறுப்பு ஆடு இருக்கு என்றார்.

ரொட்டேட் ஹெட்ஸ்

ரொட்டேட் ஹெட்ஸ்

தொடர்ந்து ரைட்டு ஹேண்ட மேல தூக்குங்க.. காலை தூக்குங்க.. ரைட்டு லெக் ஃபாவர்டு, லெஃப்ட் லெக் ஃபார்வர்டு, என மாறி மாறி சொன்னார். மேலும் ரொட்டேட் ஹெட்ஸ் என்றும் டிரில் வாங்கினார் ரியோ.

மொக்கைதான்

மொக்கைதான்


இதை அனைத்தையுமே ரஜினி குரலில் பேச முயற்சித்தார் ரியோ. இந்த டாஸ்க்கை பார்த்த நெட்டிசன்கள் பேசி பேசி கொள்வதற்கு இந்த டாஸ்க் எவ்வளவோ பரவாயில்லை என்றனர். இருந்தாலும் மற்ற மொழி பிக்பாஸ் டாஸ்க்குகளை காட்டிலும் இது மொக்கை தான் என்றும் கூறி வருகின்றனர்.

Recommended Video

என்னோட WHATSAPP GROUP NAME | CLOSE CALL WITH ACTRESS SWARNAMALYA PART-03 |FILMIBEAT TAMIL
களேபரமான வீடு

களேபரமான வீடு

இருந்த போதும் இந்த டாஸ்க்கையும் பாட்டி சொல்லை தட்டாதே, கால் செண்டர் டாஸ்க்கை போல சொதப்பி விட்டனர். மேலும் பெரும் பஞ்சாயத்து, கண்ணீர், சண்டை சச்சரவு என முதல் நாளே களேபரமாக இருந்தது பிக்பாஸ் வீடு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X