மக்களை காட்டி தேவையில்லாத பயத்தை கொடுக்கிறார்.. வெறுப்பா இருக்கு.. ஆரியை டார்கெட் செய்த ரியோ!
சென்னை: மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று கூறி, ஆரி பயமுறுத்துகிறார் என ரியோ புலம்பி தீர்த்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருமே ஆரியை எப்படியாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
பாலாஜி, ரியோ, ரம்யா, சோம் என மொத்தமாய் சேர்ந்து ஆரிக்கு கடுமையான மன அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.

தவறாக பேசி ஆதரவு
ஆரி தங்களை எல்லாம் தவறாக காட்டி வருகிறார். தனிமையில் அமர்ந்து தங்களை பற்றி தவறாக பேசி பேசியே மக்களின் ஆதரவை பெற்றுவிட்டதாக குறை சொல்லி வருகின்றனர். இதனால் ரியோ, பாலாஜி, சோம் மற்றும் ரம்யா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொடங்கியது முதலே ஆரியை நாமினேட் செய்வதை கடமையாக கொண்டுள்ளனர்.

ஆரி குறித்து புலம்பிய ரியோ
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷனுக்கு பிறகு ரியோ, ஆரி குறித்து கேபியிடம் சொல்லி புலம்பி தீர்த்தார். அதாவது, டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார் கேபி. அப்போது அவருக்கு அருகில் அமர்ந்த ரியோ முழுக்க முழுக்க ஆரியை பற்றியே பேசினார்.

பயமுறுத்துகிறார்
ஆரி புரோ பயத்தை கொடுக்கிறார்.. பயமுறுத்துகிறார். நீங்கள் என்னை இப்படி சொல்லிட்டிங்கள்ல.. இதுக்கு மக்கள் உங்களை என்ன தெரியுமா கேட்பாங்க அப்படின்னு சொல்லி வெளி உலகத்துல தேவையில்லாத பயத்தை கொடுத்து பயமுறுத்துறார்.

குறை சொல்லி காலி பண்றாரு
என்கிட்ட மட்டும் இல்ல இந்த வீட்டில நிறைய பேருக்கிட்ட இந்த பயத்தை அவர் உருவாக்குகிறார். மற்றவர்கள் மீது உள்ள குறையை கண்டுபிடிக்க காட்டும் ஆர்வத்தை தனது திருத்திக்கொள்ள காட்ட மாட்றார். ஒவ்வொரு போட்டியாளராய் குறை சொல்லி காலி பண்றாரு என்று புலம்பி தீர்த்தார்.

சிம்பிளா சொன்னேன்
மேலும் எல்லாரும் ஒன்னா சேர்ந்து விளையாடுற இடத்துல நீங்க வந்து சேரவே இல்லன்னு நான் சிம்பிளா சொன்னேன். அதுக்கு நான் 100 % உழைப்ப கொடுத்திருக்கேன். உழைப்ப வேலிடேட் பண்ணல.. குழந்தை வந்தப்போ டாஸ்க்ல இருந்தேன்னு எல்லாத்தையும் எடுத்துட்டு வர்றாரு.

வெறுப்ப உண்டாக்குறாரு
குழந்தை வந்தப்போ.. எனக்கு எதுவுமே தோனல.. அந்த குழந்தையோட அவ்ளோ பாசமா இருந்துச்சு.. ஆசையா விளையாடிட்டு இருந்தேன். இப்போ ஒரு மாதிரி வெறுப்ப உண்டாக்குறாரு.. அவரு பேசின சில வார்த்தைகள் எல்லாம் எனக்கு எக்ஸ்ட்ரா எனக்கு கோபம் தான் வருது.. என்றார் ரியோ.

மரண கலாய்
ரியோவின் இந்த பேச்சை பார்த்த ரசிகர்கள் ஆரியை தவறாக காட்ட ரியோ புதுசா எஃபோர்ட் போடுகிறார் என்று மரணமாய் கலாய்த்து வருகின்றனர். மேலும் கேபியிடம் பேசுவது போல் மக்களிடம் ஆரியை பற்றி தவறான கருத்தை பதிவு செய்கிறாராம் ரியோ என்றும் மரணமாய் ஒட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











