தேவையில்லாமல் ஆரியை கார்னர் செய்த ரியோ.. கடைசியில மொக்கை வாங்கினதுதான் மிச்சம்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் தேவையில்லாமல் ரியோ, ஆரியை டார்க்கெட் செய்த சம்பவம் ஆரி ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஏற்கனவே எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ்களை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்து இறக்கியுள்ளார் பிக்பாஸ்.

ஆரிக்கு ஆகாதவர்கள்

ஆரிக்கு ஆகாதவர்கள்

இதில் அன்பு கேங்கை சேர்ந்தவர்களும் ஆரிக்கு ஆகாதவர்களும் அப்படியே ஆஜராகியுள்ளனர். ஆனால் நடுநிலையோடும் தனித்தன்மையோடும் விளையாடிய போட்டியாளர்களான சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா மட்டும் மிஸ்ஸிங்.

தங்கமே டாஸ்க்

தங்கமே டாஸ்க்

இந்நிலையில் இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் இந்த 100 நாட்களில் நடைபெற்ற டாஸ்க்குகளில் சிறந்த டாஸ்க்குகளை மீண்டும் கொடுத்து தூசி தட்டினார் பிக்பாஸ். அதன்படி தங்கமே உன்னைதான் தேடி வந்தேனே நானே டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ஓகே வா ஆரி புரோ

ஓகே வா ஆரி புரோ

இதில் 15 போட்டியாளர்களும் மூன்று பேர் கொண்ட அணிகளாக பங்கேற்றனர். இதற்காக ரியோ, பாலாஜி, கேபி ஆகிய மூன்று பேரும் டீம் பிரித்தனர். அப்போது ஆரியின் டீமை சொன்ன கேபி, இந்த டீம் உங்களுக்கு ஓகே வா ஆரி புரோ என்று கேட்டார்.

கோர்த்துவிட்ட ரியோ..

கோர்த்துவிட்ட ரியோ..

அதற்கு தலையை அசைத்து சிரித்தப்படியே சரியென்றார் ஆரி. ஆனால் இதனை கவனிக்காத ரியோ, நாலு தடவை கேட்டுட்டா பிரதர் ஓகே வா இல்லையான்னு பதில் சொல்லுங்கள் என்றார். அதற்கு பதில் சொல்லும் ஆரி, ஓகேன்னு சொல்லிட்டேன் பிரதர் நீங்க பார்க்கலையா என்றார்.

ஆரியிடம் மல்லுக்கட்டு

ஆரியிடம் மல்லுக்கட்டு

ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொண்ட ரியோ சாரி பிரதர், நான் இப்போ ஏதாவது தப்பா கேட்டுட்டேனா என்று எல்லோருக்கும் முன்பு கேட்டார். அதற்கும் நீங்கள் கேட்ட சென்ஸ், நான் பதில் சொல்லாம அவளை இழுத்தடிக்கிற மாதிரி டோன்ல இருந்துச்சு. நான் கேபிக்கிட்டே பேசிட்டேன்னு சொன்னேன் அவ்ளோதான் என்றார்.

தப்பித்த ஆரி

தப்பித்த ஆரி

அதனை மறுக்கும் ரியோ, தெரியல பிரதர், எந்த தப்பான எண்ணத்துலேயும் நான் சொல்லல. நீங்க என்கிட்ட அப்படி ரியாக்ட் பண்ணியிருக்க வேண்டாம். நான் இடையில வந்தது தப்பு சாரி என்றார். அப்போது நான் சாரி பிரதர் சாரி பிரதர் என்று கூறியப்படியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ஆரி.

தலைவருக்கு தைரியம்

தலைவருக்கு தைரியம்

இதனை பார்த்த ரசிகர்கள், ரியோ தேவையில்லாமல் மூக்கை நுழைத்து விட்டார் என்று விளாசி வருகின்றனர். மேலும் தங்களின் கேங்கை சேர்ந்த அனைவரும் இருப்பதால் தலைவருக்கு தைரியம் வந்துவிட்டது, நாம் எகிறினால் எல்லாரும் கூட்டாக சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார் போல என விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X