’மீசையை முறுக்கு’ நாயகி ஆத்மிகாவின் அப்பா மரணம்.. மீளாத் துயரில் நடிகை பதிவிட்ட உருக்கமான போஸ்ட்!

சென்னை: நடிகை ஆத்மிகாவின் அப்பா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆத்மிகா.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன், காட்டேரி உள்ளிட்ட படங்கள், ஆத்மிகா நடிப்பில் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

❤️

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

ஆத்மிகா அப்பா மரணம்

மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 26ம் தேதி நடிகை ஆத்மிகாவின் அப்பா பானு சந்திரன் உயிரிழந்துள்ளார். தந்தையின் இழப்பால், மனம் வாடி இருந்த நடிகை ஆத்மிகா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'மிஸ் யூ பா' என தந்தையின் கரங்களில் குழந்தையாக தவழும் புகைப்படத்தை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை பொண்ணு

சென்னை பொண்ணு

பானு சந்திரன் மற்றும் நளினிக்கு மகளாக சென்னையில் பிறந்த நடிகை ஆத்மிகா, சென்னையில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்தார். 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இளம் ஹீரோயினாக அறிமுகமானார்.

எப்போ ரிலீசாகும்

எப்போ ரிலீசாகும்

மீசையை முறுக்கு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகை ஆத்மிகா நடித்த நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்கள் சில பல காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன. கோலிவுட்டில் அடுத்த பட வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில், லாக்டவுன் போடப்பட்டதால், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் கனெக்டில் இருந்து வருகிறார் ஆத்மிகா.

இதை செய்யுங்கள்

இதை செய்யுங்கள்

தனது அப்பாவுடன் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கடந்த ஜூன் 26ம் தேதி மாரடைப்பால் தனது தந்தை உயிரிழந்த துயர செய்தியை பகிர்ந்து கொண்ட நடிகை ஆத்மிகா, இந்த செய்தியை படிக்கும் நீங்கள், உங்கள் பெற்றோர்களை ஒரு நிமிடம் கட்டி அணைத்து, அன்பு செலுத்துங்கள், அவர்கள் இருக்கும் போது அவர்களின் அருமை உங்களுக்கு புரியாது என உருக்கமாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா உயிரிழந்த விசயத்தை பதிவிட்டு, தனது வருத்தத்தை தெரிவித்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த பிரபலங்களும் அவரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X