காந்தாரா பட நாயகனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

சென்னை : கன்னடத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது காந்தாரா படம்.

கன்னடத்தில் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சர்வதேச அளவில் 400 ரூபாய் வசூலித்தது.

நடிகர் ரிஷப் ஷெட்டி

நடிகர் ரிஷப் ஷெட்டி

நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது காந்தாரா படம். கன்னடத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

காந்தாரா படம்

காந்தாரா படம்

கடந்த 1800ம் ஆண்டில் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை வழங்குவதாகவும் அவரது சந்ததியினர் அவர்களிடம் இருந்து தங்களின் பூர்வீக நிலத்தை பறிக்க முயற்சிப்பதாகவும் இந்தப் படத்தின் கதை அமைந்திருந்தது. சிறப்பான கதைக்களத்துடன் திரைக்கதையும் இந்தப் படத்திற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

ரூ 400 கோடி வசூல்

ரூ 400 கோடி வசூல்

படத்தின் இயக்கத்துடன் சிறப்பான நடிப்பையும் இந்தப் படத்திற்காக ரிஷப் ஷெட்டி வழங்கியிருந்தார். கேஜிஎப் படங்களை தயாரித்த ஹம்பாலே நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்திருந்தது. 16 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாயை வசூலித்தது.

விரைவில் 2வது பாகம்

விரைவில் 2வது பாகம்

இந்தப் படத்தின் சிறப்பான வரவேற்பை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்படும் என்று ஹம்பாலே நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு

தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு

இந்நிலையில் காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டிக்கு 2023ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

2ம் பாகத்திற்கான வேலைகள்

2ம் பாகத்திற்கான வேலைகள்

காந்தாரா படம் தற்போது நெட்பிளிக்சில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தப் படம் சர்வதேச அளவில் அனைவரையும் சென்றடையும் என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில் காந்தாரா 2 படத்திற்கான வேலைகளில் ரிஷப் ஷெட்டி ஈடுபட்டுள்ளதாகவும் படம் 3000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X