Kantara 50 Days Box Office: 50 நாட்கள் தியேட்டரில் நின்னு விளையாடும் காந்தாரா.. வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்திருந்த படம் காந்தாரா. இந்த படம் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்தது. அதுவும் கொரோனா காலத்திற்குப் பின்னர் சினிமா உலகங்கள் கண்ட அதிரிபுதிரியான வெற்றிகளில் இந்த படமும் ஒன்று. இப்படி இருக்கையில் இந்த படத்தின் ப்ரீகுவல் கதையை, காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் எழுதி, இயக்கி நடித்தார் ரிஷப் ஷெட்டி. இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை குவித்துள்ளது. படம் ஓடிடி தளத்தில் வெளியான பின்னரும் படம் இன்னும் தியேட்டரில் ஓடிக் கொண்டு உள்ளது. படம் முதல் 50 நாட்களை தியேட்டரில் நிறைவு செய்துள்ளது. இந்த 50 நாட்களில் படம் எவ்வளவு பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

காந்தாரா சாப்டர் 1 இல் ரிஷப் ஷெட்டி உடன் ருக்மினி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெய்ராம், பிரமோத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். காந்தாரா படத்தைப் போலவே இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு இரட்டிப்பு இன்ப அதிர்ச்சி கொடுத்து திருப்திகரமாக ரசிகரகளை மகிழ்ச்சி அடையச் செய்தார், ரிஷப் ஷெட்டி. இதில் இரட்டை வேடங்களிலும் நடித்திருந்தார்.

Rishab Shetty Kantara A Legend Chapter-1 Day 50 Box Office Collection Crossed 900 Crores World Wide

30 நாடுகளில் ரிலீஸ்: படம் இந்தியா மட்டும் இல்லாமல், மொத்தம் 30 நாடுகளில் ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பின்னர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கிவிட்டது. இப்படி இருக்கும்போது, முதல் ஒரு மாதத்திற்குள்ளாகவே படம் ரூபாய் 820 கோடிகள் வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த வசூல் கணக்கு என்பதே, இந்த ஆண்டில் அதாவது 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள். ஷார்ப்பான வசனங்கள் உள்ளிட்டவை ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

50 நாட்கள் தியேட்டர் வசூல்: மேலும் படம் முழுவதுமே ரசிகர்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது போன்ற எண்ணத்தை ஏற்பத்திவிட்டது. படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். படக்குழுவினரும் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னரும் புரோமோசன் வேலைகளை சிறப்பாக செய்தனர். இந்நிலையில் படம் நேற்றுடன் அதாவது நவம்பர் 20ஆம் தேதியுடன் 50 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. 50 வது நாளான நேற்று படம் ரூபாய் 5 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக 50 நாட்களில் ரூபாய் 900 கோடிகளை வசூலித்துள்ளதாக, சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. படம் ரூபாய் 1000 கோடிகளை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம், ரூபாய் 900 கோடிகளை வசூலித்துள்ளதால், 900 கோடிகள் கிளப்பில் இணைந்துள்ளது.

Rishab Shetty Kantara A Legend Chapter-1 Day 50 Box Office Collection Crossed 900 Crores World Wide

மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பு: படத்தின் ஓடிடி பிசினஸ் எல்லாம் சேர்த்தால் ரூபாய் 1000 கோடி பிசினஸ் நடைபெற்றிருக்கும் என திரைத்துறையினர் பேசி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், அடுத்த பாகம் கட்டாயம் ஆயிரம் கோடிகளை அள்ளும் என்று கூறப்படுகிறது. படம் 900 கோடிகளை வசூலித்ததே படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X