ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த காந்தாரா... தமிழ் வெர்ஷனில் நாளை ரிலீஸ்!
சென்னை : கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற காந்தாரா திரைப்படம் ஐஎம்டிபி ரேட்டிங்குடன் முதலிடம் பிடித்துள்ளது
கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கன்னட திரையுலகிலிருந்து கவனிக்கத்தக்க திரைப்படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், காந்தாரா திரைப்படம் அதன் போக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
கன்னத்தில் அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர்16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

காந்தாரா
அரசர் நிம்மதியைத் தேடி காட்டுக்குள் செல்கிறார் அப்போது அப்பகுதி மக்கள் கடவுளை வழிபடுவதைப் பார்த்து, அவர்களுக்கு நிலங்களை எழுதிக் கொடுக்கிறார். இதற்குப் பிறகு 1970களில் அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலத்தை அவர்களிடமிருந்து மீட்க திட்டம்போடுகிறார். ஆனால், அங்கிருக்கும் கடவுள் அவரை எச்சரிக்கை செய்து தடுத்துவிடுகிறது.

அனைவரையும் கவர்ந்த கதை
இதற்குப் பிறகு, 1990ல் பண்ணையார் ஒருவர் அதே நிலத்தை அந்த மக்களிடமிருந்து பறிக்க நினைக்கிறார். மற்றொரு பக்கம், காப்புக் காடுகளை அளந்து மக்களை வெளியேற்றப்போவதாகக் கூறுகிறது வனத்துறை. அந்த மக்கள் வணங்கும் தெய்வம் என்ன செய்தது... அப்பகுதி மக்கள் என்ன ஆனார்கள் படத்தின் கதை. கன்னடத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

ஐஎம்டிபி ரேட்டிங்கில்
இந்நிலையில், காந்தாரா திரைப்படம் 9.5 ஐஎம்டிபி ரேட்டிங்குடன் முதலிடம் பிடித்துள்ளது . இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங் கொண்ட படமாக இது உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரேட்டிங் 8.9. இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்காக கருதப்பட்டது. இதற்கு அடுத்ததாக கேஜிஎஃப் 2 திரைப்படம் 8.4 ரேட்டிங்குடன் இரண்டாவது இடம் பிடித்திருந்தது. மூன்றாவது இடத்தை ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் 8 ரேட்டிங்கில் இருந்தது.

ஜெய்பீமை பின்னுக்குத்தள்ளி
ஜெய்பீம், கேஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு 9.5 ஐஎம்டிபி ரேட்டிங்குடன் காந்தாரா திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங் என்பது பார்வையாளர்களால் கொடுக்கப்படும் விமர்சன மதிப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











