Kantara Public Review : கன்னட சினிமாவின் மற்றுமொரு தரமான படம் காந்தாரா.. ரசிகர்கள் கருத்து!

சென்னை : நடிகர் ரிஷாப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்ற திரைப்படம் காந்தாரா.

கன்னட மொழியில் தமிழகத்தில் ஏற்கனவே இத்திரைப்படம் வெளியான நிலையில் ஹிந்தி, தெலுங்கிலும், தமிழில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகி தமிழ்த் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தமிழில் இன்று வெளியாகி உள்ள காந்தாரா படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

காந்தாரா

காந்தாரா

காந்தாரா திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை, எங்கள் நிலத்தை நாங்கள் யாருக்கும் கொடுக்கமாட்டோம் என்பது போன்ற நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இந்த படத்தை சொன்ன விதம் சூப்பரா இருக்கு. முதல் பகுதி கொஞ்சம் போராகத்தான் இருந்தது. ஆனால், இடைவேளைக்குப்பிறகு படம் விறுவிறுப்பு கூடியது. குறிப்பாக கிளைமாக்ஸ் அட்டகாசமாக இருந்தது என்றார்.

ரிஷாப் ஷெட்டி நடிப்பு அட்டகாசம்

ரிஷாப் ஷெட்டி நடிப்பு அட்டகாசம்

படம் பார்த்த மற்றொரு ரசிகர், கேஜிஎப் 2 படத்தைத் தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளதால் படத்தின் மீது எதிர்ப்பு இருந்தது. அதே போல படத்தின் டப்பிங், ஸ்க்ரீன்பிளே மேக்கிங் என அனைத்தும் தரமாக இருந்தது. ரிஷப் ஷெட்டி படத்தை இயக்கி மொத்த ஸ்கோரையும் அள்ளிவிட்டார்.

நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்

நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்

ரிஷாப் ஷெட்டி நடிப்பு சூப்பர் இந்த படம் நிச்சயம் தேசிய விருதை வாங்கும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே நமக்கு தெரிந்த கதை தான் என்றாலும், இயக்குநர் ரிஷாப் ஷெட்டி அதை வித்தியாசமாக சொல்லி இருக்கிறார். பர்ஸ்ட் ஆஃபில் படம் குழப்பமாக இருந்தது. ஆனால், செகண்ட் ஆஃப் அல்டிமெண்ட் வேற வெலில் இருந்தது.

பல காட்சிகளில் கூஸ்பம்ஸ்

தனுஷ் நடித்த கர்ணன் படம் போலத்தான் இருந்தது, இருந்தாலும் இயக்குநர் படத்தை திறமையாக கையாண்டு இருக்கிறார். கன்னட படம் போலத் தெரியவில்லை தமிழ் படம் போலத்தான் இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ரிஷாப் ஷெட்டியின் நடிப்பை பார்க்கும் போது கூஸ்பம்ஸ் வந்தது. இசை, சண்டை காட்சி, பிஜிஎம் என அனைத்தும் தரமாக இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X