காந்தாரா 2 படத்துக்கு பேக்கப் சொன்ன ரிஷப் ஷெட்டி.. 2 வருஷ கடின உழைப்பை கண் முன்னே காட்டிட்டாரே!
பெங்களூர்: கன்னட சினிமாக்கள் எல்லாம் வசூலில் பெரிதாக சாதனை படைக்க வாய்ப்பே இல்லை என மற்ற மொழி சினிமாக்கள் இருமாப்புடன் இருந்து வந்த நிலையில், கேஜிஎஃப் படத்தை தொடர்ந்து காந்தாரா படத்தையும் கொடுத்து சாண்டல்வுட் சாதனை படைத்தது. கேஜிஎஃப் 2ம் பாகம் கோலிவுட்டுக்கு முன்னதாக 1000 கோடி வசூல் சாதனை படைத்து மிரட்டிவிட்டது. இந்நிலையில், காந்தாரா 2 படம் இந்த ஆண்டு ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய போட்டியாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி பழங்குடி தெய்வமாக நடித்த காட்சிகள் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் புல்லரிக்க வைத்து விட்டது. வராஹ ரூபம் பாடல் சர்ச்சையில் சிக்கிய நிலையிலும், அந்த படம் வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், மேக்கிங் வீடியோவை ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
நம்ம ஊரு, நம்ம மண், நம்ம மக்கள்: காந்தாரா படத்தில் அரசியல்வாதிகள் வனத்தை அபகரிக்க நினைக்க, அதனை உள்ளூர் மக்களுடன் இணைந்து நாயகன் போராடி மீட்பதே கதையாக உருவானது. குல தெய்வ வழிபாடுகளின் முக்கியத்துவத்தையும் சிறப்பாக காட்டியிருப்பார்கள். காந்தாரா படத்துக்கு முந்தைய கதையாக இந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பேக்கப் சொன்ன ரிஷப் ஷெட்டி: காந்தாரா படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ரிஷப் ஷெட்டி பெரிய பட்ஜெட்டில் காந்தாரா உலகத்தையே உருவாக்கியுள்ள நிலையில், அதன் மேக்கிங் வீடியோக்களை சேர்த்து பேக்கப் சொல்லும் வீடியோவையும் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். கங்குவா போல இல்லாமல், காந்தாரா மிகப்பெரிய வெற்றி பெற்றால் சரி தான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ரிஷப் ஷெட்டி முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தையும் ரசிகர்கள் விரும்பும் அளவுக்கு உருவாக்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகுமா?: இந்த ஆண்டு இந்தியளவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை இந்தி படமான சாவ்வா படம் மட்டுமே ஈட்டியது. அந்த படத்தைத் தொடர்ந்து அஜித் குமாரின் குட் பேட் அக்லி அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள கூலி மற்றும் வார் 2 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1 அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அனைத்து இந்திய படங்களை விட அதிக வசூலை அள்ளுமா? என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது என்றும் கூறுகின்றனர். ரிஷப் ஷெட்டி சுமார் 2 ஆண்டுகளில் 250 நாட்கள் ஷூட்டிங் செய்து இந்த படத்தை உருவாக்கியிருப்பதா தனது ஷூட்டிங் நிறைவு வீடியோவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











