காந்தாரா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காந்தாரா 2 அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
சென்னை : காந்தாரா இரண்டாம் பாகம் குறித்த தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரிஷாப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ந் தேதி வெளியானது.
இப்படத்தில் ஷெட்டியுடன் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார் மற்றும் பிரமோத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

காந்தாரா
16 கோடியில் உருவான காந்தாரா திரைப்படம், பல மொழிகளில் வெளியாகி வசூலை அள்ளியது. காந்தாரா திரைப்படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்ததால், பல சாதனைகளை படைத்தது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இப்படம் திரையிடப்பட்டது. இப்போது, காந்தாரா இத்தாலிய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளியிடும் பணி நடந்து வருகிறது.

காந்தாரா 2
காந்தாரா திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, இப்போது வெளியாகியிருப்பது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறி காந்தாரா பட ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதனால், காந்தாரா 2 திரைப்படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

காந்தாரா 2 அப்டேட்
இந்நிலையில், உகாதி திருநாளான இன்று, ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், காந்தாரா 2 திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், காந்தாரத்தின் இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், உகாதி மற்றும் புத்தாண்டின் இந்த நல்ல செய்தியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இயற்கையுடனான எங்கள் உறவை வெளிப்படுத்தும் மற்றொரு நல்ல கதையுடன் உங்களை சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்
காந்தாரா இரண்டாம் பாகத்தில் ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், இந்த தகவலை ஹோம்பாளே நிறுவனம் இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்றது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்து இருந்தது. மேலும், காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், பான் இந்திய திரைப்படமாக இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் திரையரங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











