காவு வாங்கும் காந்தாரா? உயிர் தப்பிய ரிஷப் ஷெட்டி.. பயத்தில் நடுங்கும் படக்குழு!

சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்து வரும் காந்தாரா சாப்டர் 1 அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், படப்பிடிப்பில் தளத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் படத்தின் நாயகன் உயிர் தப்பினார். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதால் படக்குழுவினர் பயத்தில் உள்ளனர்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றது. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னட மலை பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Kantara 2 Rishab shetty 2
Photo Credit:

காந்தாரா 2 : சில மாதங்களுக்கு முன் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடித்து வந்த துணை நடிகர் கபில் ஆற்றில் குளிக்க சென்ற போது, திடீரென அடித்துச் செல்லப்பட்டார். மீட்பு குழுவினர் நீண்ட நேரம் தேடி உடலை மீட்டனர். அடுத்த வாரமே, படத்தில் நடித்து வந்த மற்றொரு நடிகர் ராகேஷ் பூஜாரி, மாரடைப்பால் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் படப்பிடிப்புக்காக வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜூ விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இப்படி தொடர்ந்து நடக்கும் உயிர்பலியால் படக்குழுவினர் பயத்தில் இருந்த நிலையில், தற்போது மற்றுமொரு அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.

படகு கவிழ்ந்த விபத்து: கர்நாடகாவின் மாணி அணைப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, படகு திடீரென கவிழ்ந்துள்ளது. ஆழமற்ற பகுதியில் படகு கவிழ்ந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறது. இதில் படத்தின் நாயகன் உட்பட அனைவரும் நீந்தி வந்து உயிர் தப்பி உள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் நடித்த 3 பேர் உ யிரிழந்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த விபத்து படக்குழுவினரை மேலும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

பயத்தில் நடிகர்கள்: இதுமட்டுமில்லாமல், கடந்த ஆண்டு படத்திற்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது செட் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதனால், படகுழுவிற்கு கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்லூரில் படப்பிடிப்பு நடத்துவதற்காக படகுழுவினர் ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும் பலருக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து நடக்கும் அசம்பாதித்தால், படக்குழுவினர் மந்திரவாதியிடம் கேட்ட போது, இந்த படத்திற்கு அமானுஷ்யம் இருக்கிறது. அது படத்தை தடுக்கிறது என்றும், தொடர்ந்து உயிர் பலி வரும் என்று சொன்னதால், படக்குழு மிகுந்த கவனத்துடன் படத்தை எடுத்து வருகின்றனர். இதனால், காந்தாரா படத்தில் நடிக்கவே சில பல நடிகர்கள் பயப்படுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X