Kantara Chapter1: ரத்தம் சொட்ட.. காந்தாரா 2 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
சென்னை: காந்தாரா 2 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சற்று முன் வெளியிட்டது.
கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் காந்தாரா.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படத்திற்கு கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
காந்தாரா: ரூ. 16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், திரையரங்கிற்கு அதிக மக்களை வரவைத்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. கர்நாடக மாநிலம் மங்களுர், உடுப்பி போன்ற தெற்கு கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழிபடக்கூடிய கிராம தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதால், காந்தாரா படத்தின் மகத்தான வெற்றியை முன்னோர்கள் வழிபாட்டுடன் இந்த படத்தை ஒப்பிட்டுப்பார்த்து மக்கள் பூரிப்பு அடைந்தனர்.
பல கோடி வசூல்: ரூ 16 கோடியில் உருவான இத்திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அதன்பின்னர் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
காந்தாரா இரண்டாம் பாகம்: இதையடுத்து காந்தாரா படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, தற்போது வெளியாகி உள்ள காந்தாரா படம் தான் இரண்டாம் பாகம் என்றும், முந்தைய பாகம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
Kantara A Legend Chapter1: இதையடுத்து காந்தாரா இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது Kantara A Legend Chapter 1 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆக்ரோஷமான கர்ஜனையுடன், கையில் சூலத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த போஸ்டர் திகிலூட்டும் வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











