திடீர் உடல்நலக்குறைவு.. இந்தி நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.. தீவிர சிகிச்சை!

By

மும்பை: பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் மகனான இவர், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.

சில படங்களை இயக்கியும் சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இவரது உடல்நிலை திடீரென மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள, ஹெச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரின் தம்பியும் பிரபல நடிகருமான ரந்தீர் கபூரும் அவரது குடும்பத்தினரும் இதை உறுதிபடுத்தி உள்ளனர்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

ரிஷிகபூரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் ரந்தீர் கபூர். கேன்சர் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் ரிஷி கபூர், . ஒரு வருடமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு திரும்பினார்.

உடல் நலக்குறைவு

உடல் நலக்குறைவு

குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வந்தார். இந்தியா திரும்பிய பின்னரும் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரிஷி கபூர், கடந்த 2 ஆம் தேதியில் இருந்து பதிவிடவில்லை.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

இவர், 'த இன்டர்ன்' என்ற ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர் மகன் ரன்பீர் கபூர் இந்தி படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். நடிகர் ரிஷிகபூர், சூப்பர் ஹிட் படமான 'பாபி' மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இதையடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X