twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தப்பா நினைக்காதீங்க.. ஈவினிங்ல கொஞ்ச நேரம் சரக்கு கடையை திறக்கலாம்... சீனியர் நடிகர் திடீர் யோசனை!

    By
    |

    மும்பை: மாலை நேரங்களில் மதுபான கடைகளை திறக்கலாம் என்று பிரபல சீனியர் ஹீரோ யோசனைத் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    முருகன் கண்டிப்பா காப்பாத்துவாரு | ACTOR YOGIBABU | #stayhomestayconnected

    அச்சுறுத்தும் கொரோனாவால், உறைந்து கிடக்கிறது உலகம். சீனாவின் உஹானில் ஆரம்பித்த இந்த வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது.

    இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சூர்யா பிசி.. சட்டென கமலுக்கு கதை ரெடி பண்ண கெளதம் மேனன்.. மீண்டும் வேட்டை தொடங்குகிறது!சூர்யா பிசி.. சட்டென கமலுக்கு கதை ரெடி பண்ண கெளதம் மேனன்.. மீண்டும் வேட்டை தொடங்குகிறது!

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இளவரசர் சார்லஸைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து, தியேட்டர்கள் மூடல் என மொத்த சினிமா தொழிலும் முடங்கிக் கிடக்கிறது.

    கோபமடைந்தார்

    கோபமடைந்தார்

    பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல மூத்த இந்தி நடிகர் ரிஷிகபூர், ட்விட்டரில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், 'யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்' என்று கூறியிருந்தார். அதற்கு கமென்ட் அடித்திருந்த சிலர், 'மதுபானங்களை வாங்கி வைத்து விட்டீர்களா?' என்று கேட்டிருந்தனர். இதனால் கோபமடைந்தார்.

    நெருக்கடி நிலை

    அடுத்து, 'இப்போது கண்டிப்பாக நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும். மக்கள் போலீசையும் மருத்துவ ஊழியர்களையும் தாக்குகிறார்கள்' என்று கூறி இருந்தார். இதற்கு பலர் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் இப்போது, அரசு மதுபான கடைகளை மாலை நேரம் திறந்து வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மதுபானக் கடைகள்

    மதுபானக் கடைகள்

    இதுபற்றி அவர், 'அரசு, மாலையில் கொஞ்ச நேரம் அனைத்து மதுபானக் கடைகளை திறந்து வைக்கலாம். என்னை தவறாக எண்ண வேண்டாம். மனிதன், நிச்சமற்றத் தன்மை, மனச்சோர்வு ஆகியவற்றால் மட்டுமே வீட்டில் இருப்பான். அரசுக்கு பணம் தேவை. போலீஸ், மருத்துவர்கள், மக்கள் உள்ளிட்டவர்களுக்கு கொஞ்சம் விடுதலை தேவையாக இருக்கிறது' என்று கூறியுள்ளார். இதை இயக்குனர் குணால் கோலி வரவேற்றுள்ளார்.

    மறுவாழ்வு முகாமா?

    மறுவாழ்வு முகாமா?

    மாலையில் இல்லை என்றால், காலையில் 9 மணியில் இருந்து 2 மணி வரை திறந்து வைக்கலாம். அரசுக்கும் ஊழியர்களுக்கும் வருமானம் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்னொருவர், அப்படின்னா, இந்த லாக் டவுனை மறுவாழ்வு முகாமாக நினைத்து வாழலாம்' என்று கூறியுள்ளார். சரக்கு மனுஷனுக்கு ரொம்ப முக்கியமா? என்று பலர் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    English summary
    senior actor Rishi Kapoor has suggested the government authorities open all licensed liquor stores in the evening for
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X