நீ எல்லாம் நல்லா வருவம்மா: ப்ரியா வாரியர் பற்றி ட்வீட்டிய பிரபல நடிகர்
Recommended Video

மும்பை: ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக சீனியர் நடிகர் ரிஷி கபூர் தெரிவித்துள்ளார்.
கண்ணடித்து பிரபலமானவர் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் வரும் மாணிக்ய மலராய பாடல் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார்.
யாருடா இந்த பொண்ணு என்று பாலிவுட் பிரபலங்களும் வியக்கின்றனர்.

ப்ரியா
பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ப்ரியா வாரியர். பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ப்ரியா குறித்து ரிஷி ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
எதிர்காலம்
இந்த பெண் பெரிய ஸ்டாராக வருவார் என்று நினைக்கிறேன். ப்ரியா வாரியர். மை டியர் ப்ரியா, உங்கள் வயது நடிகைகளுக்கு நீங்கள் செம போட்டியாக இருக்கப் போகிறீர்கள். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். நான் நடிக்கும்போது நீங்கள் வரவில்லையே. ஏன் என நடிகர் ரிஷி கபூர் ட்வீட்டியுள்ளார்.

கண்ணடி
கண்ணடித்து, பறக்கும் முத்தம் கொடுத்தே ப்ரியா வாரியர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது.

விஜய்
கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறார் ப்ரியா வாரியர். விஜய், விஜய் சேதுபதி, சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடிக்க ஆசைப்படுகிறார் ப்ரியா


Click it and Unblock the Notifications











