நாங்க லவ் பண்ணும்போது ரகசியமா பார்த்த படம் இதுதான்... போட்டுடைத்த ஜெனிலியாவின் கணவர்

By

சென்னை: காதலித்துக் கொண்டிருந்தபோது ஜெனிலியாவுடன் ரகசியமாக பார்த்த முதல் படம் எது என்று அவரது காதல் கணவர் தெரிவித்துள்ளார்.

அமிதாப், ஷாரூக் கான், ஜெயா பச்சன், கஜோல், ஹிர்திக் ரோஷன், கரீனா கபூர் உட்பட பலர் நடித்திருந்த படம், 'கபி குஷி கபி கம்'. கரண் ஜோஹர் இயக்கி இருந்த இந்தப் படம், 2001 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

Riteish Deshmukh Reveals He Took Wife Genelia To Watch The Film On First Date

வசூலில் சாதனைப் படைத்த இந்தப் படம் ரிலீஸ் ஆகி இன்றோடு 18 வருடம் ஆனதை ஒட்டி, டிவிட்டரில் கரண் ஜோஹர் பதிவிட்டிருந்தார். கதையைத் திரும்பிப் பார்க்கும்போது, இன்னும் அன்பை உணர்கிறேன். இது எப்போதும் பெற்றோரை நேசிப்பது பற்றியது. சிறந்த நடிகர்களுடனும் குழுவுடனும் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பலர், இந்தப் படம் தொடர்பான தங்கள் அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் அபிஷேக் பச்சன், தனது தந்தை நடித்த படங்களில் ஆல் டைம் பேவரைட், இதுதான் என்று தெரிவித்துள்ளார்.

Riteish Deshmukh Reveals He Took Wife Genelia To Watch The Film On First Date

இந்நிலையில் நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் தனது அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில், என் முதல் டேட்டிங்கின்போது, இந்தப் படத்துக்குத்தான் ஜெனிலியாவை ரகசியமாக அழைத்துச் சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, படத்தில் இடம்பெற்றுள்ள, சுராஜ் ஹுவா மதாம்... பாடல்தான் எங்கள் காதல் பாடலாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளர். இப்படி தங்கள் காதல் கதையை அவர் வெளிப்படையாக பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

ஜெனிலியா, தமிழில், ஷங்கரின் பாய்ஸ், விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் உட்பட பல படங்களில் நடித்தவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X