பிப்ரவரி 3-ல் நடிகை ஜெனிலியா - ரிதேஷ் திருமணம் - முறைப்படி அறிவிப்பு!

இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் இது. வருகிற 31-ந்தேதி மும்பையில் உள்ள பந்த்ரா ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த சடங்குகள் நடக்கின்றன.
பிப்ரவரி 3-ந்தேதி திருமணமும் 4-ந்தேதி திருமண வரவேற்பும் மும்பை சாந்தா குரூபில் உள்ள கிராண்ட் ஹயாஷ் ஓட்டலில் நடக்கிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு நடிகர்-நடிகைகள் திருமணத்தில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு திருமண அழைப்பிதழை ஜெனிலியாவும் ரிதேஷ் தேஷ்முக்கும் கைப்பட எழுதி அனுப்பி வருகின்றனர்.
திருமணத்துக்கு பின் ஜெனிலியா சினிமாவில் நடிக்கமாட்டார் எனத் தெரிகிறது. அவர் சினிமாவில் நடிப்பதை மணமகனின் தந்தையும் மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் ஜெனிலியா.


Click it and Unblock the Notifications











