நல்ல குடும்பம்! ஹீரோ பாத்திரம் கழுவ, பூரி கட்டையுடன் மனைவி முறைக்க.. ஹீரோயினின் மிரட்டும் டிக் டாக்!
மும்பை: பிரபல நடிகை மிரட்ட, அவர் கணவர் பாத்திரம் கழுவும் டிக் டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்த இவர், பிரபல இந்தி நடிகரும் மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நடிப்பை நிறுத்தினார்
இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்பதை நிறுத்தி விட்டு, குழந்தைகளைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

டிக் டாக் வீடியோ
சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரித்தேஷ் தேஷ்முக்-கும் ஜெனிலியாவும் இணைந்து காமெடி டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அஜய்தேவ்கன், ரவீணா நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான 'தில்வாலே' படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு இருவரும் நடித்துள்ளனர்.

பாத்திரம் கழுவுகிறார்
'இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஜய்தேவ்கன்ஜி. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், உங்கள் பாடலில் இருந்து சின்ன காமெடி. வாழ்த்துகள்' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ரிதேஷ். வீடியோவில் ரித்தேஷ் தேஷ்முக் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்க, ஜெனிலியா உருளைக் கட்டையுடன் அவரை மிரட்டுவது போல நிற்க.. அந்த வீடியோ செல்கிறது.

திரும்பவும் கழுவாதீங்க
இதைப் பார்த்த நெட்டிசன்ஸ், சிரிப்பு எமோஜியை பறக்கவிட்டுள்ளனர். சிலர், நல்ல ஹஸ்பன்ட் சார். நீங்க எங்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளனர். 'உங்களை நினைச்சா பெருமையா இருக்கு' என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர் ஏற்கனவே கழுவிய பாத்திரங்களை ஏன் திரும்பவும் கழுவறீங்க சார் என்று கேட்டுள்ளனர்.

இப்படி டிக் டாக்
'வீடியோவுக்காக இல்ல. நிஜமாவே வீட்டுல இதெல்லாம் பண்ணுங்க' என்று ஒருவர் அட்வைஸ் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், இப்படி டிக் டாக் வெளியிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். ஜெனிலியா பிறந்த நாளுக்கும் அவர் டிக் டாக் வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











