குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா?
Recommended Video
சென்னை: நடிகை ரித்திகா சிங் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்தி வருவதால், நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக கூறப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் சூப்பராக நடித்து பெயர் வாங்கினார்.

இறுதிச்சுற்று படத்தின் இந்தி உள்ளிட்ட பிற மொழி ரீமேக்குகளிலும் ரித்திகாவே நடித்தார். மேலும் இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இறுதிச்சுற்று படத்தை அடுத்து, விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா ஆகிய படங்களில் ரித்திகா நடித்தார். தற்போது வணங்காமுடி, பாக்ஸர், ஓ மை கடவுளே ஆகிய படங்களில் ரித்திகா நடித்துள்ளார். மூன்று படங்களுமே ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் புதிய படங்கள் எதிலும் அவர் கமிட்டாகவில்லை.
இந்நிலையில் ரித்திகா சிங் கடந்த சில தினங்களாகவே கிக் பாக்சிங் பயிற்சியில் மீண்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இரவு பகலாக தான் பயிற்சி செய்யும் வீடியோக்களை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 'பழைய ரித்திகா இஸ் பேக்' என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் நடிப்பை ஓரங்கட்டி வைத்துவிட்டு மீண்டும் கிக் பாக்சிங்கில் கவனம் செலுத்த ரித்திகா சிங் முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அது உண்மையாக இருக்கக்கூடும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











