Thalaivar 170 - தலைவர் 170 படப்பிடிப்பில் விபத்து..நடிகை ரித்திகா சிங்கிற்கு காயம்..அவரே வெளியிட்ட ஷாக் பதிவு

சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ரித்திகா சிங்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளது

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Rithika Singh Met Accident in Thalaivar 170 Movie Shooting Spot

அடுத்த படம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்கு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அண்மையில் ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதால் இருவரும் ஸ்க்ரீனில் எப்படி இருப்பார்கள் என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

தொடரும் ஷூட்டிங்: ஜெய் பீம் படத்தில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குநர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து என்ன மாதிரியான கருத்தை கூறவிருக்கிறார் என்ற கேள்வி பலமாகவே எழுந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் தொடங்கிய ஷூட்டிங் அடுத்த பணகுடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, மும்பையில் நடந்துவருகிறது.

விபத்து: இந்நிலையில் தலைவர் 170 படப்படிப்பில் விபத்து ஏற்பட்டு ரித்திகா சிங் காயமடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், "கண்ணாடி இருக்கிறது கவனமாக இருங்கள் என்று கூட இருந்தவர்கள் எச்சரித்தும் நிலைத்தடுமாறி அதில் விழுந்து காயமடைந்துவிட்டேன். ஓநாயுடன் சண்டை போட்டது போல் காயம் இருக்கிறது.

கட்டுப்படுத்த முடியாது: இது நடக்கக்கூடிய ஒன்றுதான். உங்களால் சில நேரங்களில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது. அதுபோல் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகத்தான் இந்த விபத்து. தற்போது எனக்கு எந்த வலியும் இல்லை. காயம் ஆழமாக இருக்கிறது. இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன். மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X