ஒர்க்கவுட் பண்ணிக்கிட்டே டான்ஸ் ஆடலாம் வாங்க... நடிகை ரித்திகா சிங்!
சென்னை : நிஜ வாழ்க்கையில் பாக்ஸிங் வீரராக இருக்கும் நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று மூலம் அறிமுகமானவர்.
அசோக் செல்வன் நடித்து தயாரித்திருந்த ஓ மை கடவுளேவில் கதாநாயகியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
பாக்சர்,பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வரும் ரித்திகா டான்ஸ் பண்ணிக்கிட்டே ஒர்க்கவுட் செய்யும் புதுவிதமான நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை பாஷையில்
அறிமுகமான முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாருடா இந்த பொண்ணு என அனைவரையும் மிரள வைத்த நடிகை ரித்திகா சிங் நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக வாழ்க்கையை தொடங்கியவர் இறுதிச்சுற்று படத்திலும் பாக்ஸராக நடித்து இருந்தார். நடிகர் மாதவனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய கம்பேக்காக இருந்தாலும் ரித்திகா செமயாக ஸ்கோர் செய்து பக்கா சென்னை பாஷையில் பேசியது பலரையும் வியக்க வைத்தது.

இறுதியில் காதலியாக
இறுதிச்சுற்று தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்ய அதிலும் நடித்து தெலுங்கு சினிமாவிற்கும் அறிமுகம் செய்யப்பட்ட ரித்திகா தமிழில் ஆண்டவன் கட்டளை , சிவலிங்கா உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். காலத்திற்கு தகுந்தாற்போல் காதல் படங்களும் வித்தியாசமாக வெளியாகி வரை சமீபத்தில் அசோக் செல்வன் நடித்து தயாரித்த ஓ மை கடவுளே மிகப்பெரிய வெற்றி பெற்றது இதில் நடிகை ரித்திகா சிங் தோழியாகவும் இறுதியில் காதலியாகவும் நடித்து கைதட்டல்களைப் பெற்றார்.

இயக்க உள்ளதாக
ஓ மை கடவுளே வெற்றியைத் தொடர்ந்து அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 மற்றும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பிச்சைக்காரன் 2 விஜய் ஆண்டனி இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது

டான்ஸ் ஆடலாம்
தினமும் அயராது உடற்பயிற்சி செய்து வரும் ரித்திகா சிங் காலையில் எழுந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்ய சூப்பரான டிப்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார். வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்ய சோம்பலாக இருந்தால் டான்ஸ் ஆடிக் கொண்டே உடற்பயிற்சி செய்யுங்கள் ஒவ்வொரு காலையும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும் என வொர்க்கவுட் பண்ணிக்கிட்டே டான்ஸ் ஆடும் ஜாலியான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











