Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நான் எந்த சாதின்னு உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா: ரித்விகா
Recommended Video
சென்னை: கூகுளில் தனது சாதியை தேடியவர்களுக்கு பதில் அளித்துள்ளார் ரித்விகா.
பரதேசி படம் மூலம் நடிகையானவர் ரித்விகா. வளர்ந்து வரும் நடிகையான அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக் பாஸ் 2 டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் பலரும் ரித்விகாவின் சாதியை தெரிந்து கொள்ள கூகுள் செய்துள்ளனர்.
கூகுள்
ரித்விகாவின் சாதியை பலர் கூகுளில் தேடியுள்ளனர். அதில் சிலர் Rithvika caste in tamil என்று போட்டு கூகுள் செய்துள்ளனர். ரித்விகா ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு பிக் பாஸ் 2 டைட்டில் கிடைத்ததாகவும் பேச்சு கிளம்பியுள்ளது. இது ரித்விகாவுக்கு தெரிய வரவே அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
|
ரித்விகா
ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா.. என்று ட்வீட் செய்துள்ளார் ரித்விகா.
விமர்சனம்
ரித்விகாவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்ஸ் நீ ஏம்மா இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துகிட்டு இருக்க, போய் வேலையை பாரு என்று தெரிவித்துள்ளனர். சிலர் பாராட்டியுள்ளனர். மேலும் சிலரோ, பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தமிழ் பொண்ணு என்றீர்கள் தற்போது சாதி பற்றி பேசுகிறீர்கள், ஏன் இந்த வேண்டாத வேலை என்று கேட்டுள்ளனர்.
டைட்டில்
பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை வென்றபோது அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரித்விகா விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் டைட்டில் கொடுக்கப்பட்டது என்று பேசுகிறார்கள். ஆக மொத்தம் டைட்டிலை வென்றால் சாதி, மதம் குறித்த பேச்சு எழுகிறது.