L2: Empuraan: மோகன்லாலின் மாஸ் என்ட்ரிக்கு ரஜினி தான் காரணமா.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்

கேரளா: லூசிபர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் பான் இண்டியா படமாக உருவாகியுள்ளது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் மோகன்லாலுவுக்கான மாஸ் என்ட்ரி குறித்தும் இதில் நடிகர் ரஜினி குறித்தும் படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாறன் தெரிவித்திருப்பது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் இல்லாமல் ஒரு என்ட்ரியா என்ற ரேஞ்சுக்கு பேச தொடங்கி விட்டனர்.
.
பிரம்மாண்ட முறையில் பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம், வரும் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாள படம் என்ற சிறப்பையும் இது பெற்றிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எம்புரான் படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினி வெளியிட்டார். இதில், அரசியல் யுத்தம், கடவுளின் தேசத்தை காப்பாற்ற வருகிறான் லூசிபர் மாஸ் வசனங்கள் இடம்பெற்று பெரும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.

rithviraj-said-he-made-mohanlals-first-entry-with-rajinikanth-in-mind

லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை நோக்கி நம்மை இழுக்கிறது. கதை, ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில் யார் என்பதைச் சுற்றி நகர்கிறது. ஒரு முறை எம்எல்ஏ ஆனாலும், இந்திய அரசியலின் முக்கிய தலைவராக ஸ்டீபன் கொண்டாடப்படுகிறார். அவருக்கு சர்வதேச கடத்தல் குழுவுடன் என்ன தொடர்பு என சுவாரஸ்யமான கேள்விகளுக்கு எம்புரான் பதிலளிக்கும் என தெரிகிறது.
Game of Thrones புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் எம்புரான் படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், டோவினோ தாமஸ் என பெரும் நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் இயக்குநரான பிருத்விராஜ், ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து எம்புரான் படத்தின் டிரெய்லரை போட்டு காண்பித்து பாராட்டுக்களை பெற்றார். பின்னர், எம்புரான் பட டிரெய்லரை ரஜினிகாந்த் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. லூசிபர் படத்தை காட்டிலும் அனைத்து மொழிகளிலும் எம்புரான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டார்க் ஷேட் பக்கங்களை கமர்ஷியலாக முயற்சித்திருக்கும் பிருத்விராஜூவிற்கு வாழ்த்துகள் குவிகின்றன. இதனிடையே, இப்படம் குறித்து சமீபத்தில் பிருத்விராஜ் அளித்த பேட்டியில், லூசிபர் படத்தில் மோகன் லால் காரில் இருந்து இறங்கும் அறிமுக காட்சி உருவான விதம் குறித்து தற்போது தெரிவித்துள்ளார்.

rithviraj-said-he-made-mohanlals-first-entry-with-rajinikanth-in-mind

அதில், பல வருடங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போயஸ் கார்டன் சாலையில் முதல்வர் கான்வாய் செல்வதற்காக ரஜினிகாந்தின் காரை செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். கொஞ்ச நேரத்தில் டென்ஷன் ஆன ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நடந்ததை பார்த்து மக்கள் கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நான் செய்திகளில் படித்திருக்கிறேன். இந்த சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் லூசிபர் படத்தில் முதல் காட்சியை உருவாக்கினேன் என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

அறிமுக காட்சியில் மோகன்லால் காரை செல்ல விடாமல் தடுப்பார்கள். இதனால், மோகன்லால் மிக புத்திசாலித்தனமாக கார் தானே செல்லக்கூடாது. நான் போக தடை இல்லையே என்றூ கூறி காரில் இருந்து இறங்கி நடந்து செல்வார். அப்படித்தான் அந்தக் காட்சியை எடுத்தேன் என அவர் தெரிவித்தார். இதை கேட்டு அரசியலை கரைத்து குடித்திருக்கிறார் என நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X