ஓ மை கடவுளே.. தலைவரை பார்த்துட்டேன்.. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த ரித்திகா சிங்.. வேட்டையன் பராக்!

சென்னை: ஜெய்பீம் படம் இயக்கிய ஞானவேல் அடுத்து பிரம்மாண்டமாக ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தற்போது நடிகை ரித்திகா சிங் இணைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் உடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

எந்திரன், கபாலி, 2.0 உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், கமல்ஹாசன் விக்ரம் படம் மூலமாக மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ள நிலையில், மேலும், பிரஷர் அதிகமானது.

Ritika Singh joins Vettaiyan movie shooting and poses with Rajinikanth

ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட மல்டி ஸ்டார்கள் இணைந்த நிலையில், ஜெயிலர் படம் 600 கோடி வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக கடந்த ஆண்டு மாறியது.

ஹார்ட் டிஸ்க்கை காணோம்: கடந்த ஆண்டே ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. சாதாரண ஒரு ஊரில் நடக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய மத அரசியல் படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்குகிறாரே படம் பெரியளவில் பேசப்படும் என எதிர்பார்த்த நிலையில், ஹார்ட் டிஸ்க்கே தொலைந்து போய் அவர் எடுத்த காட்சிகள் எல்லாம் காணாமல் போய் விட்டதாம். அதனால், கிடைத்த காட்சிகளை வைத்து உப்புமா கிண்டி ரசிகர்களை ஏமாற்றி கொடுத்து விடலாம் என நினைத்த நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்செல்லாம் படத்துக்கு பாசிட்டிவாக அமையாமல் போக படம் தோல்வியை தழுவியது. மீண்டும் ரஜினிகாந்தின் மார்க்கெட்டை அவரது மகள் ஐஸ்வர்யாவே சரிய வைத்து விட்டாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

வேட்டையன் காப்பாற்றும்: ஆனால், ஜெய்பீம் எனும் தரமான படத்தை சூர்யாவை வைத்து இயக்கிய ஞானவேல் நிச்சயம் ரஜினிகாந்துக்கு வேட்டையன் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது குருநாதர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரஜினியுடன் ரித்திகா சிங்: திருவனந்தபுரத்தில் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. ஆரம்பத்தில் மஞ்சு வாரியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பின்னர் மும்பையில் அமிதாப் பச்சன் உடனான காட்சிகளும், தற்போது ஹைதராபாத்தில் ராணா டகுபதி உடனான காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் ரித்திகா சிங் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரித்திகா சிங் ரஜினிகாந்தை பார்த்த சந்தோஷத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ரித்திகா சிங் வேட்டையன் படத்திலும் வெயிட்டு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X