பரபரக்கும் மர்டர் மிஸ்டரி கதை.. விஜய் ஆண்டனி ஜோடியாகிறார் அந்த பிரபல நடிகை.. ட்விட்டரில் தகவல்!

By

சென்னை: விஜய் ஆண்டனி படத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச் சுற்று' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ரித்திகா சிங்.

கிக் பாக்சிங் வீராங்கனையான இவர், பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்.

ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை

இறுதிச்சுற்று படம் இந்தியில், சாலா கடூஸ் என்ற பெயரில் வெளியானது. மாதவன் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரித்திகாவுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். இந்தப் படமும் ஹிட்டானது. பின்னர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கிய சிவலிங்கா படத்தில் ஹீரோயின் ஆனார்.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

தெலுங்கிலும் நடித்துள்ள ரித்திகா சிங்குக்கு, இடையில் சில வருடங்கள் படங்கள் இல்லை. இதையடுத்து அசோக் செல்வன் ஜோடியாக, ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஷா ரா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து மீண்டும் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் ரித்திகா.

மர்டர் மிஸ்டரி கதை

மர்டர் மிஸ்டரி கதை

இப்போது அவர் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க இருக்கிறார். விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி குமார் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோ. இந்தப் படத்தை இன்பினிடி பிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் பிராபிட் ஆகிய நிறுவனங்கள் இதை தயாரிக்கின்றன. மர்டர் மிஸ்டரி கதையை கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

கொரோனாவில் இருந்து மீண்டு.. மீண்டும் பணிக்குத் திரும்பிய 390 போலீசார்.. ரகுல் ப்ரீத் சிங் சல்யூட்!
அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள்

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்கிறார் ரித்திகா சிங். இப்போது, பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள 'தமிழரசன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இது விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து நவீன் இயக்கும் 'அக்னி சிறகுகள்', 'வாய்மை' செந்தில்குமார் இயக்கும் 'காக்கி' படங்களில் நடித்து வருகிறார். ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடிக்கும் அவர், அடுத்து பிச்சைக்காரன் 2 படத்திலும் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X