பட வாய்ப்பே இல்லை.. ஐட்டம் பாடலுக்கு ஆட வந்த இறுதிச்சுற்று ஹீரோயின்.. என்ன இப்படி ஆகிடுச்சு!

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் பவர்ஃபுல் நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவையே திணறடித்த நடிகை ரித்திகா சிங் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் அளவுக்கு இறங்கி விட்டார் என ட்ரோல்கள் பறக்கின்றன.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப் கோதா படத்தின் "கலாட்டாக்காரன்" பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், அந்த பாடலில் குத்தாட்டம் போட்டிருக்கிறார் நடிகை ரித்திகா சிங். அவரது டான்ஸ் ஸ்டில்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வர்ணித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Ritika Singh turns item dancer for Dulquer Salmans King of Kotha

இறுதிச்சுற்று ஹீரோயின்: MMA என அழைக்கப்படும் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியனான ரித்திகா சிங் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016ல் வெளியான மாதவனின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

"ஏய் சண்டக்காரா" என அவர் பாட்டு பாடி பாக்ஸிங் செய்து நடித்த நடிப்பை பார்த்து இந்திய திரையுலகமே ஆடிப் போனது. அதே திரைப்படம் சாலா கதூஸ் என இந்தியிலும், குரு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டும் வெளியானது.

Ritika Singh turns item dancer for Dulquer Salmans King of Kotha

ஓ மை கடவுளே படத்துக்கு பிறகு: விஜய்சேதுபதி உடன் இணைந்து ரித்திகா சிங் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படமும் அவருக்கு ஒரு நல்ல படமாகவே அமைந்தது. ஆனால், அதன் பின்னர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் அவருக்கு முதல் ஃபிளாப் படமாக மாறியது.

2020ம் ஆண்டு அசோக் செல்வன், விஜய்சேதுபதி, வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே படம் மீண்டும் ரித்திகா சிங்குக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக வந்த கொலை திரைப்படம் வந்த சுவடே தெரியாமல் ஃபிளாப் ஆனது. அருண் விஜய் உடன் அவர் நடித்த பாக்ஸர் திரைப்படமும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

Ritika Singh turns item dancer for Dulquer Salmans King of Kotha

ஐட்டம் டான்ஸராக மாறிட்டாரு: கொலை படத்திற்கு பிறகு ரித்திகா சிங் கைவசம் எந்தவொரு புதிய படங்களும் இல்லை. இந்த நிலையில், துல்கர் சல்மா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, டான்ஸிங் ரோஸ், அனிகா சுரேந்திரன் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படத்தில் "கலாட்டக்காரா" எனும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரித்திகா சிங்.

கவர்ச்சி உடையில் ரித்திகா சிங் துல்கர் சல்மான் உடன் நடனமாடிய காட்சிகளையும், அவரது டான்ஸ் ஸ்டில்களையும் லிரிக் வீடியோவில் இருந்து எடுத்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமந்தா போல: முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவே அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் "ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போடவில்லையா? அதன் பின்னரும் அவர் ஹீரோயினாகத்தானே நடித்து வருகிறார். ரித்திகா சிங் சூஸ் பண்ணித்தான் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கான கதை அமைந்தால், நிச்சயம் அசத்தி விடுவார் என நெட்டிசன்களுக்கு ரித்திகா சிங்கின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X