சிரஞ்சீவியின் மெகா குடும்பத்தில் இருந்து மாப்பிள்ளையை பிடித்துவிட்டாரா ரிது வர்மா?.. 5 வயசு கம்மியாம்!

ஹைதராபாத்: துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரிது வர்மா இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்த நிலையில், இருவரும் அதை மறுத்துள்ளனர். ஆனால், இருவரும் காதலிக்கவில்லை என்றும் இருவரது குடும்பமே சேர்ந்து அவர்களுக்கு நேரடியாக திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாக சூப்பரான தகவல்கள் கசிந்துள்ளன.

ஆந்திராவில் 1990ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்த நடிகை ரிது வர்மா இந்த மாதம் தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அதிலும், அவர் விஜய் சேதுபதி க்ரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்த உப்பென்னா படத்தில் ஹீரோவாக நடித்த வைஷ்ணவ் தேஜ் என்பவருடன் பிறந்தநாளை கொண்டாடியதாக தகவல்கள் கசிய இருவரும் காதலிப்பதாகவும் ரூமர்கள் கிளம்பின.

Ritu Varma and Vaishnav Tej marriage rumours sparks social media

ஆனால், தற்போது இருவரும் கூடிய விரைவில் திருமணமே செய்துக் கொள்ளப்போவதாக வெளியான தகவல்களால் அவர்களது ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாகி உள்ளனர்.

காதலர்கள் இல்லை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் டோலிவுட் நடிகை ரிது வர்மா. சியான் விக்ரம் உடன் அவர் இணைந்து நடித்த துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் தூங்கிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், உப்பென்னா படத்தின் மூலம் பிரபலமான இளம் நடிகர் வைஷ்ணவ் தேஜ் என்பவரை ரிது வர்மா காதலிப்பதாக ரூமர்கள் கிளம்பின. ஆனால், இருவரும் காதலிக்கவில்லை என்றும் நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று கூறியுள்ளனர்.

5 வயது குறைவு: நடிகை ரிது வர்மாவுக்கு கடந்த மார்ச் 10ம் தேதியுடன் 35 வயது தாண்டி விட்டது. ஆனால், நடிகர் வைஷ்ணவ் தேஜுக்கு இப்போதான் 30 வயதே ஆகிறது. சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் பல பிரபலங்கள் வயது குறைவானவர்களை திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த ஜோடியும் அப்படி திருமணம் செய்து கொள்வார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Ritu Varma and Vaishnav Tej marriage rumours sparks social media

மெகா குடும்பத்து மருமகள்: ஏற்கனவே நடிகை லாவண்யா திரிபாதி நடிகர் வருண் தேஜை திருமணம் செய்துகொண்டு மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் மருமகளாக மாறினார். இந்நிலையில், அதுபோன்ற யோகம் தற்போது நடிகை ரிது வர்மாவுக்கும் அடித்திருப்பதாக பேச்சுக்கள் டோலிவுட் வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரி மகன் தான் வைஷ்ணவ் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

மெனக்கெடும் பெரியவர்கள்: ரிது வர்மா மற்றும் வைஷ்ணவ் தேஜ் இருவரும் தாங்கள் காதலர்கள் இல்லை வெறும் நண்பர்கள் மட்டும் தான் எனக் கூறியுள்ள நிலையிலும், இரு வீட்டை சேர்ந்த பெரியவர்கள் இவர்களுக்கு திருமணத்தை செய்து வைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வெளியாகி உள்ள தகவல்கள் தான் மீண்டும் இவர்கள் குறித்த திருமண ரூமர் அதிகம் பரவ காரணமாக உள்ளது. இதுதொடர்பாக ரிது வர்மா என்ன சொல்லப் போகிறார் என்பதற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி என்றே சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X